தந்தை பெரியார் பற்றிய எழுச்சியூட்டும் கலைஞரின் ஈடு இணையற்ற புரட்சிக் கவிதை வரிகள் பாரீர் ! "

தந்தை பெரியார் பற்றிய எழுச்சியூட்டும் கலைஞரின் ஈடு இணையற்ற புரட்சிக் கவிதை வரிகள் பாரீர் ! " எரிமலையாய் சுடுதழலாய் இயற்கைக் கூத்தாய் எதிர்ப்புக்களை நடுங்க வைக்கும் இடியொலியாய் இன உணர்வுத் தீப்பந்த பேரொளியாய் இழிவுகளைத் தீர்த்துக்கட்டும் கொடுவாளாய் இறைவனுக்கே மறுப்புச் சொன்ன இங்கர்சாலாய் பகுத்தறிவு பேசுகின்ற ஏதன்ஸ் நகர சாக்ரட்டீசாய் ஏன்னென்று கேட்பதிலே வைரநெஞ்ச வால்டேராய் எம் தந்தை பெரியாரும் வாழ்ந்திட்டார்; நம் சிந்தை ஒவ்வொன்றிலும் நிறைந்திட்டார். அறிவு மழை போழியும் எழில் வழியும் இருள் கழியும் தெளிவுமிகு உரைகள் பல ஒளி தரும் திறன் மிளிரும் கடலின் மடை அலையின் ஒலி மலையின் முடி தழுவும் முகில் வழியும் அறிவு மழை பொழியும் ஆணவங்கள் அழியும் அடிமை முறை ஒழியும் அய்யாவின் பேச்சென்றால்.. .......கலைஞர்

கருத்துகள்