படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! புகைப்படக் கலைஞர் ஜெகன் இந்த கொரோனா ஊரடங்கால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் புகைப்பட கலைஞர்கள் தான். 90% பேருக்கு கேமரா பிடிப்பதை தவிர வேறு தொழில் தெரியாது. மாசத்துக்கு 2,3 ஆர்டர் நம்பிதான் பிழைப்பு ஓடும். அதுலையும் வளர்பிறை முகூர்த்தம் ஞாயிற்றுகிழமை முகூர்த்தம் வேற, ஆடி, புரட்டாசி, மார்கழி முழு லீவு ஊரடங்கால் கடந்த ஒரு வருடமாக அதிகம் பாதிப்பு புகைப்பட கலைஞர்களுக்கு மட்டுமே. திருமணநிகழ்வுகள் முன்பு போல் பெரிய அளவிலும் கிடையாது. திருமண நிகழ்வு நடந்தாலும் ஓரளவு கூட்டத்தோடு தான் நடக்கிறது. வேலைக்கு சென்றாலும் உயிரை பணயம் வைத்து தான் புகைப்படம் எடுக்க வேண்டியுள்ளது. ஆனால் முன்பை விட கூட்டம் குறைவு என கணக்கு காட்டி பெரிய அளவில் வருமானத்திலும் கைவைக்கிறார்கள். தம்பி மொத்தமே 50 பேர்தான் 2 மணிநேரம் தான் சொல்லி காலையில் 5 மணிக்கு ஆரம்பித்தி மாலை 7 மணிக்கு விட்ட கதையெல்லாம் நிறைய இருக்கு. வேலை பார்க்கும் நேரமோ அதே அளவுதான் கூடவே கொரோனா ரிஸ்க்கும் தான். எனக்கு தெரிந்து நிறைய கலைஞர்கள் வருமானம் இன்றி நொடிந்து போய்விட்டனர். இதில் கேமராவை விற்றுவிட்டு வேறு தொழில் மாறியவர்களும் உண்டு வேறு வேலைக்கு போனவர்கள் உண்டு. மாதம் ஆன EMI, கடை வாடகை, EB பில், நடக்காத School க்கு பீஸ் அப்பப்பா முன்பெல்லாம் குறைந்தது 3 வருடத்திற்கு புதிய கேமரா மாற்ற வேண்டி வராது... இப்ப பார்த்தா தினம் தினம் ஒரு மாடல் பல ஆயிரத்தில் இருந்தது. இன்று பல லட்சங்கள் வேற... முடியலடா சாமி..... என்று தனியும் இந்த கொரனா தாகம்

கருத்துகள்