ஆசிரியர் : முதுமுனைவர். வெ.இறையன்பு, --'செய்தி தரும் சேதி' என்ற நூலில், --புகைப்பட போதை எனும் தலைப்பில்.

-ஆசிரியர் : முதுமுனைவர். வெ.இறையன்பு, --'செய்தி தரும் சேதி' என்ற நூலில், --புகைப்பட போதை எனும் தலைப்பில்.
* உடலை வெறுக்க வேண்டிய அவசியமில்லை. நேசிப்பவர்களுக்கு உடல் உபாயம். * வாழ்க்கை என்பது அதிசயப்படுவதில் அடங்கியிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. * இன்று இளைஞர்கள் இயற்கையின் அழகை உள்வாங்குவதைவிட வெளிக்காட்டுவதே அதிகம். * அலைபேசியில் பதிவு செய்தா திருவள்ளுவர் 'மோப்பக்குழையும் அனிச்சம்' என்று மகத்தான உவமையைக் கையாண்டார் ! * எந்த புகைப்படத்தைப் பார்த்து கம்பன் 'தண்டலை மயில்களாட' என்று வார்த்தைச் சித்திரத்தை வடித்தார் ! * பாரதியும், பாரதிதாசனும் கண்களால் புகைப்படமெடுத்து, நெஞ்சத்தில் அதை பதிப்பித்தார்கள். * அமைதியில் மட்டுமே ரசிக்க முடியும்.அதற்கு ஆழ்ந்த தனிமை தேவை. எதனுடனும் ஒப்பிடாமல் இருமையற்ற நிலையில் இருக்கும் போது மட்டுமே அது சாத்தியம். * பூவை ரசிப்பதற்கு காம்பாக வேண்டும், மலையை ரசிப்பதற்கு மேகமாக வேண்டும், வயலை ரசிப்பதற்கு பாய்ந்து ஓடும் நீராக வேண்டும்.

கருத்துகள்