தமிழ் ஹைக்கூ கவிதைகளுக்கு பெயர் பெற்றவர்களென்று ஐந்து பேரை பட்டியலிட்டால் அதற்குள் நிச்சயமாய் கவிஞர் இரா.இரவி யின் பெயரும் அடங்கும்.
தமிழ் ஹைக்கூ கவிதைகளை முன்னெடுத்தவர்களில் முதலாமாவராக சிலர் அமுதபாரதியை சுட்டுவதுண்டு. மு.முருகேசை பிரதானமாக முன்மொழியவும் பலபேர் உண்டு. புதுவை தமிழ்நெஞ்சனும் ஹைக்கூ தடத்தில் ஆழமாய் கவனம் பெற்றவர்தான். புதுக்கோட்டை 'ஏழைதாசன்' விஜயகுமார் ஹைக்கூ வளர்ச்சிக்கு தம் இதழின் வாயிலாக பெரும் பங்கு ஆற்றியுள்ளார். அந்த வகையில் சத்தமில்லாமல் ஹைக்கூவில் பெரும் பிரளயமே நடத்தியவர் இரா.இரவி. இன்று காலையில் அலைபேசியில் அழைத்து அன்பு பகிர்ந்தது எமக்கு பெரும் ஊக்கம். அன்பருக்கு நான் வழங்கும் பரிசாய் காலவெளியில் இந்த ஓவியம் மங்காது வளர்ந்து நிற்கலாம். கவியோவியத் தமிழன்
கருத்துகள்
கருத்துரையிடுக