படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி

படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி. *🙏இன்றைய சிந்தனை🙏* *🌷30.05.2021🌷* 🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑 *உங்கள் பெயரால் உங்களை அறிமுகம் செய்வதை விட உங்கள் செயலால் உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள் இந்த உலகம் உங்களை மறக்காது.* *முயற்சிகளைத் துவங்கும் போது பயத்தைக் கொன்று விடுங்கள். இல்லை என்றால் பயம் உங்கள் முயற்சிகளைக் கொன்று விடும்.* *நான் என்கிற ஆணவம். அவனா?என்கிற பொறாமை. எனக்கு என்கிற பேராசை. இந்த மூன்று குணங்களும் மனிதனை நிம்மதியாக வாழ விடாது.* *சிலரை மனக்கசப்புடன் கையாளுவதை விட அவர்களை இழப்பதே மேல்.!* *இளமையில் கருமை முதுமையில் வெண்மை இதுவே இயற்கையின் தன்மை. இளமையில் இனிமை முதுமையில் தனிமை இதுவும் இயற்கையின் தன்மை.* *வாழ்க்கை உங்களைத் தானாக நகர்த்தாது...!!முயற்சியே நம்முடைய வாழ்க்கையை அடுத்தக் கட்டத்துக்கு அழைத்துச் செல்லும்...!!* *தன்னம்பிக்கையில் தளர்வு ஏற்படும் போதெல்லாம் தன் நம்பிக்கையோடு அருகிருந்து ஆறுதலுரைத்து அரவணைத்து நம்மை சரியான திசையில் பயணிக்க வைக்கும் தாய்மை உணர்வு கொண்ட தோழமையொன்றின் நட்பு நமக்குக் கிடைத்த வரம்.* *நீங்கள் சம்பாதிப்பதன் மூலம் நீங்கள் ஒரு வாழ்க்கையை சம்பாதிக்கிறீர்கள். நீங்கள் கொடுப்பதன் மூலம் நீங்கள் ஒரு வாழ்க்கையை உருவாக்குகிறீர்கள்.* *மிகப்பெரிய உயரத்தை அடைய விரும்பினால்...! எதிர்பார்ப்பு தலைக்கணம் பொறாமை இவற்றை முதலில் கீழிறக்கினால் தானாக மேலே செல்வீர்கள்...!!* *எதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லையோ அதை மாற்றிக் கொள்ளுங்கள்.* *எதை உங்களால் மாற்றிக் கொள்ள முடியவில்லையோ அதை ஏற்றுக் கொள்ளுங்கள்..* *நீங்கள் விழும் போது முதலில் உதவி செய்பவர் ஏற்கனவே அந்த வலியை உணர்ந்தவராய் இருப்பார்...* *யாருக்குப் போய்ச் சேரும் என்பதைப் பொருட்படுத்தாமல் செயலாற்றுபவர்களால் தான் மகத்தான காரியங்களை நிறைவேற்ற முடியும்.* *வாழ்த்துகள்.* *வாழ்க வளமுடன்.*

கருத்துகள்