ஆசிரியர் : முதுமுனைவர் வெ.இறையன்பு, செய்தி தரும் சேதி' என்ற நூலில், சுற்றுலா நட்பு உள்ளம் எனும் தலைப்பில்.

ஆசிரியர் : முதுமுனைவர் வெ.இறையன்பு, செய்தி தரும் சேதி' என்ற நூலில், சுற்றுலா நட்பு உள்ளம் எனும் தலைப்பில். சுற்றுலா என்பது இடங்களால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. சுற்றி இருக்கிற மக்களும், வழிநெடுக வாய்க்கிற வசந்த அனுபவங்களுமே சுற்றுலாவை சொர்க்க பூமியாக மாற்றுகின்றன. * பாலைவனத்தில் பயணித்தாலும் எதிர்கொள்ளும் மக்கள் ஈர இதயத்தோடு இருந்தால், வீசுகிற மணற்காற்றும் மலர்க்காற்றாய் மனதை வருடும். * குளிர்ந்த பிரதேசத்திலும் கொதிப்பேற்றுகிற அளவிற்குப் பேசுகிற உள்ளூர் மக்கள் இருந்தால் ஊதக்காற்றிலும் உடல் முழுவதும் கொப்பளங்கள் தோன்றும். * 'அந்நிய மண்' என்று அறியாதவண்ணம் அன்னியோன்யம் காட்டுகிற மக்களே நம் உறவினர்கள். * தேநீரில் சிறிது இனிப்பு குறைந்தாலும் பரிமாறுபவர்கள் சிரிப்பில் அது சரிக்கட்டப்படும். * ஒதுக்கப்பட்ட அறையில் வசதி குறைந்தாலும் அசதி தராத தூக்கம் உபசரிப்பால் அமையும். * சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றி பணம் சம்பாதிப்பது பொன் முட்டையிடும் வாத்தை பொரியலாக்கியதைப்போல பேராசையின் வெளிப்பாடு. * அப்பாக்கள் தப்பாமல் சேமித்துவைத்த சொத்தை வாரிசுகள் சூறையாடுவதைப்போல, பழம்பெருமை பல்வேறு கிளைகளாக விரிந்திருந்தும் கோட்டைவிடுகிற நாடுகளும் உண்டு. * எப்போதும் சுத்தமாக இருக்கும் இடத்தில் யாரும் குப்பைபோட விரும்புவதில்லை என்பதே அனுபவம் சொல்லும் அரிய பாடம். -

கருத்துகள்