படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா.இரவி !

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா.இரவி ! பிற மொழிகளுடன் ஒப்பிடுகையில் தமிழ் எவ்வாறு தனித்துவமானது? எனக்கு 6 மொழிகள் தெரியும், (எழுதப் படிக்க - பேசத் தெரிந்த மொழிகள் 13) அதனால் என்னால் இந்த பதில் எழுத முடியும்‌ என்று நம்புகிறேன். அனைவரும் இந்த கேள்விக்கு நல்ல பதில்கள் எழுதி உள்ளார். நானும் எனக்கு தெரிந்தது, நாம் அனைவருக்கும் இன்னும் பல விடயங்கள் தெரியவேண்டும் என்று எழுதுகிறேன். தமிழ் மொழிக்கு 2000 ஆண்டுகளின் வரலாறுள்ளது. உலகத்தில் தமிழ் மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை 7 கோடி. 2004ஆம் ஆண்டில் யுனெஸ்கோவால் தமிழ் ஒரு பாரம்பரிய மொழியாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் சமஸ்கிருதத்தை தேவ பாஷை என்று எவ்வாறு அழைப்போமொ, தமிழை நாம் தெய்வத் தமிழ் என்று அழைப்பதுண்டு. தமிழில் மட்டுமே கடவுள்களுக்கு தூய தமிழ் பெயர்கள் உள்ளன. முருகன் — குமார சுவாமி, பெருமாள் — வெங்கடேஸ்வரா சுவாமி, பிள்ளையார் — கணபதி போன்றவை. நான் 6 மொழிகள் — தமிழ், ஹிந்தி, குஜராத்தி, மராத்தி, ஆங்கிலம், வங்காளம் அறிந்திருக்கிறேன், எனக்குத் தெரிந்து மற்ற மொழிகளுடன் ஒப்பிடும்போது தமிழில் தூய தமிழ்ச் சொற்கள் மிக அதிகம். மற்ற மொழிகளில் சமக்கிருதச் சொற்கள் அதிகம். தமிழில் மட்டும் தான் எழுத்துகளுக்கு உயிர், மெய், உயிர் மெய் எழுத்துக்கள் என்று பெயர் இருக்கிறது. உயிரெழுத்துகள் உயிருள்ளவை, ஆனால் மெய்யெழுத்துகளுக்கு உயிர் சேர்ந்தா தான் அந்த மெய்யெழுத்துக்கு உயிர் வரும். ஆகா என்ன ஒரு ஒப்பீடு. மற்ற இந்திய மொழிகளுடன் ஒப்பிடும்போது தமிழில் மட்டுமே குறைவான எழுத்துகள் உள்ளன. மற்ற மொழிகளில் க, ச, ட, த, ப வர்க்கங்கள் உள்ளன, ஒவ்வொரு வர்க்கத்திலும் 5 எழுத்துகள் உள்ளன, நம் தமிழில் மட்டுமே அவ்வாறு இல்லை. ( இதைப் பற்றி நான் தனியே பதிவிட்டிருக்கிறேன்) எடுத்துக்காட்டுக்கு சந்திரா மற்றும் சூரியா பெயர்களை கவனிக்கவும் இரண்டு பெயர்களும் 'ச' எழுத்தால் தொடங்கியது ஆனால் உச்சரிப்பது வேறு, நாமும் சரியான பிழையின்றி உச்சரிப்போம். ஆகா என்ன ஒரு புரிதல். தமிழில் மட்டுமே ஆய்த எழுத்து ஃ உள்ளது. தமிழ் மற்றும் மலையாளத்தில் தான் 'ழ', 'ற' என்ற எழுத்து இன்னும் பயன் பாட்டில் உள்ளது. மற்ற மொழிகளில் இந்த எழுத்தை நீக்கப்பட்டுள்ளது. தமிழில் மட்டுமே ந மற்றும் ந ண ன என்று மூன்று உள்ளன. எடுத்துக்காட்டாக நந்தினி, நாராயணன் என்று பெயர்கள் கவனிக்கவும், இதில் ந வால் தொடங்கி ன வால் முடிகிறது, அதுவே மற்ற மொழிகளில் இரண்டு ந, ண மட்டும்தான் உள்ளது. தமிழில் மட்டுமே எழுத்து தமிழ், பேச்சு தமிழ் என்று இரண்டு உள்ளன, இதனால் நாம் தூய செந்தமிழை காப்பாற்றி வருகிறோம், அதுவே மற்ற மொழிகளில் ஒரே வகையான மொழி தான் உண்டு அவர்களின் பழைய மொழி மறந்துவிட்டார்கள். தமிழுக்கு மற்றுமே மற்றொரு சிறப்பு என்னவென்றால் மெய் எழுத்துக்கள் பயன் படுத்துவது, எடுத்துக்காட்டாக சென்னை மற்றும் மெட்ராஸ் சொற்கள் கவனிக்கவும், இவற்றில் ன், ட் மெய்யெழுத்துக்கள் உள்ளன, ஆனால் இதுவே இந்தியிலும், சமக்கிருதத்திலும் चेन्नई, मद्रास என்றும், தெலுங்கில் చెన్నై, మద్రాసు என்றும், கன்னடத்தில் ಚೆನ್ನೈ, ಮದ್ರಾಸು என்றும், மலையாளத்தில் ചെന്നൈ, മദ്രാസ് என்று எழுதப்படுகிறது மற்ற மொழிகளில் இரண்டு எழுத்துக்கள் சேரும் பொழுது பாதி பாதியாக சேர்கிறது, அதுவே தமிழில் மெய்யெழுத்து முழுவதுமாக எழுதப்படுகிறது. இந்தக் கருத்தினால் தான் தமிழி என்று ஒரு தமிழ் பிராமி எழுத்துக்கள் உள்ளவை என்று கண்டு பிடிக்கப்பட்டது. தமிழில் மட்டுமே நமக்கு அறிவியலுக்கு சம்பந்தப்பட்ட தமிழில் சொற்கள் உள்ளன, அவை நாம் அறிவோம் மற்றும் பயன் படுத்துவோம். பாலின் வினைச்சொற்கள் (gendered verbs) பற்றி நாம் அறிவோம் அல்லவா. இதனை பற்றி ஒரு சிறப்பான அம்சம் என்னவென்றால் மற்ற மொழிகளுடன் ஒப்பிட்டு சொல்கிறேன். தெலுங்கில் பெண்பால் மற்றும் ஆண்பால் அல்லாத வினைச்சொற்கள் உள்ளவை. இந்தியில் ஆண்பால் மற்றும் பெண்பால் வினைச்சொற்கள் உள்ளவை. மலையாளத்தில் மற்றும் அஸ்ஸாமியாவில் பாலின் வினைச்சொற்களே இல்லை. கன்னடத்தில் மற்றும் மராத்தியில் ஆண்பால், பெண்பால் மற்றும் நடுநிலேயான வினைச்சொற்களை காணலாம். ஆனால் தமிழில் மட்டும் தான் திணை என்ற கருத்துள்ளது. அவை உயர்திணை, அஃறிணை. மனிதர்கள், கடவுள்கள் உயர்திணை கீழே வருவார்கள். மற்ற உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் அஃறிணை கீழே வரும். தமிழில் மட்டுமே அனைத்து மதங்களின் (— இந்துத்தும், இஸ்லாம், கிருஸ்தவம், பௌத்தம், ஜெய்னம்) புனித புத்தகங்களுள்ளன. தமிழில் மட்டுமே நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்று சொல்லப்படும் தமிழ் வேதமுண்டு, இது சமஸ்கிருதச்தின நான்கு வேதங்களுக்கு சமம். முத்தமிழ் என்ற பெயர் கேள்வி பட்டிருப்பீர்கள் அல்லவா, தமிழ் இலக்கணம் உரை நடை, கவிதையில் மட்டுமின்றி நடனம், இசை, நாடகத்திலும் உள்ளன. முத்தமிழ்/ மூன்று தமிழ் — இயற்றமிழ் (இலக்கியம்), இசைத்தமிழ் மற்றும் நாடகத்தமிழ். தமிழில் குறிப்பிடத்தக்க இலக்கியம் தான் திருக்குறள், இது மற்ற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது மற்றும் பாராட்டப்பட்டது. பிரான்ஸின் ஒரு பேருந்தில் திருக்குறள் பிரஞ்சு மொழியில். கல் தோன்றி மண் தோன்றா காலத்தே, வாளோடு முன் தோன்றி மூத்த குடி — தமிழ்க்குடி! கடைசியில் மகாகவி பாரதியார் கவிதையில் முடிக்கிறேன்- "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்'. நன்றி ஐயா : Lakshmann Chettiar

கருத்துகள்