புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின்..
புகழ்பெற்ற வரிகளில் சில மட்டும்...!
"""""""""""""""""""""""'''''''''""""""""""""""""""""""""""""""""""""""""
புதியதோர் உலகம் செய்வோம்.! கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்.
*
இருட்டறையில் உள்ளதடா உலகம்-- சாதி
இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே.
*
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்.
*
கல்வியில்லாத பெண்கள்
களர்நிலம் அதில்
புல் விளைந்திடலாம் நல்ல
புதல்வர்கள் விளைவதில்லை.
*
கண்ணின் கடைப்பார்வை
காதலியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமரர்க்கு
மாமலையும் ஓர்கடுகாம்.
*
சாணிக்கு பொட்டிட்டு
சாமியென்பார் செய்கைக்கு
நாணி. உறங்கு
நகைத்து நீ கண்ணுறங்கு.!
*
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு.
*
தூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம்
தூயநற்றமிழரை தமிழ்கொண்டெழுப்பினோம்.
*
கொலை வாளினை எடடா-- மிகு
கொடியோர் செயல் அறவே.
*
கருத்துகள்
கருத்துரையிடுக