படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! "நூல்களை வாசிப்பது என்பது நல்ல ஒரு பழக்கம். நூல்களை வாசித்தால் மனதில் உள்ள துயரங்கள் எல்லாம் போகும். உற்சாகம் பிறக்கும். இனம்புரியாத சுமைகள் உள்ளத்தில் இருந்தால் அவைகளை இறக்கி வைப்பதற்கு நூல் உதவும். எழுத்தாளரை மதிக்காத எந்தவொரு தேசமும் முன்னுக்கு வர முடியாது என்று அண்ணல் மகாத்மா காந்தி அவர்கள் சொல்லியுள்ளார். நல்ல நூல்களை வாசியுங்கள். நல்ல கருத்துக்களை நேசியுங்கள். நல்ல கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்‌. புதிதாக வீடு கட்டும்போது நூலகத்துக்கு என்று தனி அறை ஒன்று ஒதுக்குங்கள். அவை உங்கள் வாழ்வில் நிம்மதியை கொடுக்கும்; வளம் கொழிக்க க வழி வகுக்கும்.".. "நூல்களை வாசியுங்கள்; உங்கள் நோய்கள் குணமாகும். நூல்களை முழுமனதோடு நேசியுங்கள், ரத்த அழுத்தம் குறையும். சர்க்கரை நோய் மறையும்; இதயம் வலுப்பெறும். மனம் லேசாகும், மகிழ்ச்சி பெருகும், உடல் நலம் தேறும். நூல்களை நெஞ்சார நேசியுங்கள், மனம் ஒருநிலைப் படும். அழகேசன் சொல்லவில்லை, அறிவியல் உலகத்தின் சமீபத்திய கண்டுபிடிப்பு."-------:::::::-------எடப்பாடி ஆ அழகேசன்

கருத்துகள்