ஆசிரியர் : முதுமுனைவர் வெ.இறையன்பு, செய்தி தரும் சேதி' என்ற நூலில், ஏரியில் இறங்குவோம் எனும் தலைப்பில்.

ஆசிரியர் : முதுமுனைவர் வெ.இறையன்பு, செய்தி தரும் சேதி' என்ற நூலில், ஏரியில் இறங்குவோம் எனும் தலைப்பில். ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** பணத்தைச் சேமிக்க உண்டியல், தானியத்தைச் சேமிக்கக் கிடங்கு, நீரைச் சேமிக்க ஏரி என்று வாழ்ந்தவர்கள் நம் முன்னோர். * மனவியல் ரீதியாக 'நாளை' என்பது மாயை. கற்பனை செய்யும் அச்சங்களுக்காக மன இறுக்கத்தில் உழல்பவர்கள் நாம். * உடலியல் ரீதியாக 'நாளை' என்பது நடைமுறை. எதிர்காலத்திற்காக சிந்தித்து பல தலைமுறைகளாக உருவாக்கியவையே நம் ஏரிகள். * இன்று நம்மால் ஒரு புது ஏரியை உருவாக்க முடியாது. இருப்பவற்றையும் இழந்து வருகிறோம். நம் பேராசையின் அசுரக்கைகள் நம் இன்றிற்காக நாளைகளை நசுக்கி வருகின்றன. * பொன்னேரிக் கரை சின்ன வேடந்தாங்கலாய் மாறிப்போனது. * வண்டலூர் உயிரியல் பூங்காவின் உள்ளே இருக்கும் ஏரியை தூர்வாரிச் செப்பனிட்டபோது வருகிற வெளி நாட்டுப் பறவைகளின் எண்ணிக்கை எகிறியது. * உற்சாகம் தொற்றிக்கொள்ளக்கூடியது, ஊக்கம் பற்றிக்கொள்ளக் கூடியது. * முதலில் கைதட்டிய பொதுமக்கள் இப்போது கைகளை உயர்த்திக்கொண்டு ஏரியில் இறங்கத் தொடங்கினர். * எந்த நீண்ட பயணமும் சின்ன அடியாகவே ஆரம்பமாகிறது. * மழை வரும்போதே நீரைச் சேமிக்க வேண்டும். உடல் நன்றாக இருக்கும்போதே பயிற்சிகள் செய்ய வேண்டும். இதுவே புதுத்தாங்கல் இளைஞர்கள் விடுக்கும் சேதி.

கருத்துகள்