ஆசிரியர் : முதுமுனைவர். வெ.இறையன்பு, செய்தி தரும் சேதி' என்ற நூலில், வலியைத் தாங்குவதே வலிமை எனும் தலைப்பில்.

ஆசிரியர் : முதுமுனைவர். வெ.இறையன்பு, செய்தி தரும் சேதி' என்ற நூலில், வலியைத் தாங்குவதே வலிமை எனும் தலைப்பில். ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** வலியைத் தாங்குவதே வலிமை. * வாழ்க்கை என்பது வலிகளின் தொகுப்பு. * சிலர் வலிகளால் உடைந்து விடுகிறார்கள், சிலர் உடைத்து எறிகிறார்கள். * நல்ல வளர்ப்பு என்பது வலியைத் தாங்கப் பழக்குவதே. * வறட்சிக்கும் தாக்குப்பிடிக்கும் பயிர்களையே உழவர்கள் விரும்புகிறார்கள். * நீர் வார்க்காமல் வளர்ந்து கனிகளைத் தரும் மரங்களையே காலம் காத்து வருகிறது. * மனிதன் நட்ட மரங்களைக் காட்டிலும் மண்ணே நட்ட மரங்களே அதிகம். * கரங்கள் நட்ட மரங்களைக் காட்டிலும் காற்றே நட்ட மரங்களே அதிகம். * வீரம் என்பது வலியைப் பொருட்படுத்தாமலிருப்பது என்பதை உணர்த்துவதற்காக, புறநானூறு மரணத்தையும் மாண்புடையதாக மாற்றிய தகத்தாய தமிழ்ச் சமுதாயத்தைப்பற்றிப் பதிவு செய்தது. * இதிகாசங்களில் அதிக வலியைப் பொறுத்துக்கொள்பவர்கள் நாயகர்களாகச் சித்தரிக்கப் படுகின்றனர்.

கருத்துகள்