ஆசிரியர் : முது முனைவர். வெ.இறையன்பு, --'செய்தி தரும் சேதி' என்ற நூலில், --உண்மை ஊழியம் எனும் தலைப்பில்.

ஆசிரியர் : முது முனைவர். வெ.இறையன்பு, --'செய்தி தரும் சேதி' என்ற நூலில், --உண்மை ஊழியம் எனும் தலைப்பில். ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** பணத்தின் தேவையிருக்கிற இடங்களில் கடைப்பிடிக்கப்படும் நேர்மை மகத்துவமானது. உயர்ந்த அதிகாரி நேர்மையாக இருப்பதில் வியப்பு இல்லை. அவர் அப்படித்தான் இருந்தாக வேண்டும். * கடைநிலையில் பணியாற்றுபவர்கள் கறாராக மட்டுமின்றி கனிவாகவும் நடந்தால் தலைமை அலுவலகத்திற்குத் தலைவலிகள் குறைவு. * விவரம் தெரியாமல் கையில் மனுவுடன் அலைகிற பரிதாபத்திற்குரிய மனிதர்கள் நிர்வாகத்தின் அவமானச் சின்னங்கள். * பழகுவதில் நட்பு, கண்களில் கனிவு, சொற்களில் இனிமை, செயல்களில் விரைவு, வாக்கினில் தூய்மை, கைகளில் வாய்மை, பணியாற்றுவதில் நிறைவு, இயலாது என்பதைச் சொல்வதிலும் பக்குவம், நம்பிக்கையைத் தருகிற அணுகுமுறை என்கிற அனைத்தின் கலவையாக அவர்கள் இருந்தால் மட்டுமே நிர்வாகம் நிமிர முடியும். * நிறைவேற்றப்பட வேண்டிய இடத்திலிருப்பவர்கள் நித்திரை கொள்வதால் பரிகாரம் தேடி பலரும் படையெடுக்கிறார்கள். * கேட்கிற காதுகளும், கவனிக்கிற கண்களும் இல்லாததால் களாக்காயளவுப் பிரச்சினைகள் பலாக்காயளவிற்குப் பெரிதாகிவிடுகின்றன. * 'என் அலுவலகத்தில் எந்த மேசையிலும் எந்தக் கோப்பும் தேவையின்றித் தேங்காது' என்று சொல்வதே நேர்மை. * நேர்மையை பல்துலக்குவதைப்போல அத்தியாவசியமாகக் கையாள வேண்டும். அதைப் பவுடர் பூசுவதைப்போல ஆடம்பரமாக்க வேண்டிய அவசியமில்லை. * நேர்மையை இயக்கமாக மாற்ற வேண்டும். இல்லத்திலிருந்து புறப்பட வேண்டும். உதயத்தின்போது எல்லா இடங்களிலும் பரவும் ஒளியைப்போல அதன் வீச்சும் திகழ வேண்டும் என்பதே இச்செய்தி தரும் சேதி. --

கருத்துகள்