காந்தி கண்ணதாசன் ! விவேக்!

காந்தி கண்ணதாசன் ! விவேக்! இந்த சிறிய பெயர் எதனை ஆயிரம் மனங்களை சிரிக்க வைத்து இருக்கிறது! கவலைகளை மறக்க வைத்து இருக்கிறது. சிந்திக்க வைத்து இருக்கிறது. 1998இல் எனது சகோதரன் அண்ணாதுரை கண்ணதாசன் நண்பரை அறிமுகம் செய்து வைத்தார். அவ்வப்போது பேசுவோம். கிடைக்காத புத்தகங்களை வாங்கித்தரச்சொல்லுவார்.அவரோடு பேசுகின்றபொழுது நேரம் போவதே தெரியாது. 2002 - அண்ணா பல்கலையில் கலாம் அய்யா அவர்கள் இந்திய ஜனாதிபதியாக பதவியேற்க டெல்லி செல்லும்முன் விவேக் அவர்கள் அங்கு வந்த பொழுது அறிமுகம் செய்துவைத்தேன். " மரம் நடுவதை முழுமையாக நீங்கள் முன்னெடுக்கலாம்' என்ற அன்பு கட்டளையை ஜனாதிபதி அவர்கள் விவேக்கிடம் வைத்தார். அதன் தொடர்ச்சி அதனுடைய வளர்ச்சி அனைவரும் அறிந்ததே. கலாம் அவர்களது கடைசி நூலான ' வாழ்கை வாழ்வதற்கே ` நூல் வெளியீட்டு விழாவிற்கு வந்து விவேக் அவர்கள் பேசியது அவர் எவ்வளவு படித்து இருக்கிறார் அதை அழகாக மேற்கோள் காட்டுகிறார் எனவியந்தேன். காலன் இவ்வளவு விரைவாக இந்தச் " சின்னக் கலைவாணரை " அழைத்துக்கொள்வர் என எண்ணிப்பார்க்க இயலவில்லை. இறுதியில் அரசு மரியாதை - மேலானோர் மேலானோர் தான்.. நினைவில், சின்னத் திரையில் இனி இந்த சின்னக் கலைவாணரை பார்த்து ஆறுதல் கொள்ள வேண்டியிருக்கிறது. நண்பரே! நீங்கள் நட்ட லட்சக்கணக்காண மரங்கள் உங்கள் பெயர் சொல்லி மக்களுக்கு தன்னால் இயன்ற நல்லதைச் செய்யும்

கருத்துகள்