6.4.2013 அன்று தேடல் அமைப்பு மதுரையில் நடத்திய கருத்தரங்கில் முனைவர். வெ.இறையன்பு, இஆப அவர்கள் ஆற்றிய உரையில், நம்முடைய சிந்தனையைத் தூண்டும் சிந்தனை முத்துக்கள்...
6.4.2013 அன்று தேடல் அமைப்பு மதுரையில் நடத்திய கருத்தரங்கில்
முனைவர். வெ.இறையன்பு, இஆப அவர்கள் ஆற்றிய உரையில், நம்முடைய சிந்தனையைத் தூண்டும் சிந்தனை முத்துக்கள்...
(1).இந்த பூமியில் எதை விட்டுச் செல்கிறார்களோ அதுவே அடையாளம்.
(2).பிறருக்குப் பயன்பட வாழ்வதே சாதனை.
(3).மகாகவி பாரதியை இன்றும் நாம் ஏன் கொண்டாடுகிறோம்? 500 ஆண்டுகளுக்கு பின் என்ன நடக்கும் என்று அன்றே சிந்தித்தவன்.அவனது சிந்தனையில் 10 சதவிகிதம் கூட நாம் நிறைவேற்றவில்லை.
(4).திருக்குறளே திருவள்ளுவரின் அடையாளம்.
(5).புற அடையாளங்கள் உண்மையான அடையாளங்கள் அன்று தோலின் நிறமோ, ஆடையோ, உயரமோ, இவை அல்ல அடையாளங்கள்.
(6).இந்த உலகிற்கு நிரந்தரமான பங்களிப்பை விட்டுச் செல்வதுதான் உண்மையான அடையாளம்.
(7).நிறம் இருக்கும் மலருக்கு மணம் இருப்பதில்லை.
மணம் இருக்கும் மலருக்கு நிறம் இருப்பதில்லை.
(😎.பல திறமை இருந்தால் அவற்றுள் எந்தத் திறமையை மேம்படுத்துவது என்று தேர்ந்தெடுங்கள்.
---இறையன்பு
கருவூலம்.
---கவிஞர்.இரா.இரவி.
கருத்துகள்
கருத்துரையிடுக