28.3.2021 தேதியிட்ட ராணி வார இதழில் " மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:

28.3.2021 தேதியிட்ட ராணி வார இதழில் " மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-* * புயலின்போது யாரைப் பற்றி அதிகம் கவலைப்பட்டீர்கள்? கடலில் துடுப்புப் போட்டால்தான் வீட்டில் அடுப்பு எரியும் என்பதற்காக... காற்று வீசும்போது கடலில் இறங்கி காணாமல் போகிறவர்களுக்காகக் கண்ணீர் மல்கக் கவலைப்பட்டேன். * 'ஆகுபெயர்' என்றால் என்ன? துடைப்பம் விற்பவர் வீதியில் போகும்போது,'துடைப்பம்...துடைப்பம்...' என்று பெருங்குரலில் கூவிச் செல்வதைப் பார்க்கலாம்.(வாங்கும் பொருட்டு) அவரைத் 'துடைப்பம்' என்று அழைத்தால் அது 'ஆகுபெயர் '. விற்காத நேரத்தில் அழைத்தால் துடைப்பத்தாலேயே நம்மை ஒன்று போடுவார். அப்போது அது 'ஆகாத பெயர் '. * மனம் ஏன் அடிக்கடி அலைபாய்கிறது? அது கடலாக இருப்பதால்! * ஆபத்தோடு வாழ்வது என்றால்? சில அதிகாரிகளிடம் பணியாற்றுவது! * ஆழமே உயரமாவது எப்போது? ஆழமான நட்பே உயர்ந்ததாகவும் இருக்கிறபோது. * பரிசுச்சீட்டில் பணம் கிடைத்தால் பரவசப்படுவீர்களா? உழைக்காமல் பெறுகிற ஒவ்வொரு ரூபாயும் கையூட்டுக்குச் சமமே!

கருத்துகள்