25.4.2021 தேதியிட்ட ராணி வார இதழில் " மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-*

25.4.2021 தேதியிட்ட ராணி வார இதழில் " மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-* * மலர்களிடம் என்ன கற்றுக்கொள்ள வேண்டும்? மௌனம். தருகிற மலர்கள் மௌனம் காக்கின்றன...பெறுகிற வண்டுகள் சத்தமிடுகின்றன. * சுளையாய்ப் பணம் கொடுத்து வாங்கும் பழம் எது? சுளையாய்ப் பணம் கொடுத்தாலும் சுளை சுளையாய் வாங்கும் பழம் பலா. * எதைத் திருடுவதில் தவறில்லை? உள்ளத்தைத் திருடுவது. * சேருகிற இடம் ஏன் முக்கியம்? பூங்காவில் வீசும் பூங்காற்றில் நறுமணம் தவழ்கின்றது. மயானத்தில் தவழும் தென்றலில் நாற்றம் அடிக்கிறது. நல்ல மனிதர்களின் இருத்தலில் நாமும் மலர்கிறோம். * சிலர் ஏன் தலைதெறிக்கும் அவசரத்தில் இரு சக்கர வாகனத்தை ஓட்டுகிறார்கள்? தலை தெறிக்கத்தான்

கருத்துகள்