25.4.2021 தேதியிட்ட ராணி வார இதழில் " மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-*
25.4.2021 தேதியிட்ட ராணி வார இதழில் " மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-*
* நாத்திகத்தின் பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும்?
ஆன்மிகம் என்னும் வைரம் மின்ன பட்டை தீட்டும் அறமாக இருக்க வேண்டுமே தவிர...அதை அடித்து நொறுக்கும் சுத்தியாக இருக்கக் கூடாது.
* கவர்ச்சி, ஈர்ப்பு என்ன வேறுபாடு?
ஒப்பனைகள் தரும் கற்பனைகளால் உண்டாவது கவர்ச்சி.
இதயங்கள் இயல்பாக இருப்பதால் ஏற்படுவது ஈர்ப்பு.
* விழித்துப் படித்தால் வெற்றி சாத்தியமா?
விழித்துப் படித்தால் மட்டும் போதாது;
விழிப்புணர்வுடனும் படிக்க வேண்டும்.
* கால்களுக்குக் கூட வேர்கள் முளைக்க வாய்ப்புண்டா?
மரத்துப்போன மனிதர்களுக்காகக் காத்திருந்தால் வேர்கள் முளைக்க வாய்ப்புண்டு.
* 'கடனே' என்று வாழ்பவர்கள் யார்?
கந்து வட்டிக்கடைக்காரர்கள்.
* கழுத்தறுக்கும் போட்டியில் யார் ஈடுபடுகிறார்கள்?
கழுத்துக்கு மேல் காலியாக இருப்பவர்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக