25.4.2021 தேதியிட்ட ராணி வார இதழில் " மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-*

25.4.2021 தேதியிட்ட ராணி வார இதழில் " மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-* * நெடுநாள் வாழ என்ன செய்ய வேண்டும்? 'ஆயிலை'க் குறைத்தால் 'ஆயுள்' அதிகரிக்கும். * காமம் கலக்காத காதல் இருக்க முடியுமா? காமம் காதலின் முடிவுரையாக இருக்க வேண்டுமே தவிர...முகவுரையாக இருக்கக் கூடாது. * நுகர்வோர் செயல்பாடு எப்படி இருக்கிறது? கூவி விற்பவர்களிடம் கறாராகப் பேரம் பேசுபவர்கள், குளிர்சாதன அங்காடிகளில் கேட்ட பணத்தைக் கனிவாகக் கொடுக்கிறார்கள். * அனுபவம் சாதகமா, பாதகமா? நேற்றைய பிரச்சினைக்குக் கண்ட தீர்வு இன்றுள்ள பிரச்சினையைத் தீர்க்கப் பயன்படுவதில்லை. இன்றைய சூழல் முற்றிலும் புதிது. அனுபவம், கீறல் விழுந்த இசைத்தட்டாக மாற முனைவதால் பல நேரங்களில் பிசகி பிரச்சினையாகிவிடுகிறது. * 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை' என்பதற்கு உதாரணம்? கூட்டணிகள். * 'கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்' என்று அன்று வாழ்ந்தார்களே? 'கள்' ளானாலும் கணவன், 'ஃபுல்' லானாலும் புருஷன் என்று இன்றும் பலர் வாழ்கிறார்களே!

கருத்துகள்