2.5.2021 தேதியிட்ட ராணி வார இதழில் " மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-*
2.5.2021 தேதியிட்ட ராணி வார இதழில் " மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-*
* கைநிறையச் சம்பாதிப்பவர்கள் அதிகரித்திருக்கிறார்களே?
கைநிறையச் சம்பாதிப்பவர்கள் எண்ணிக்கையால் அல்ல; மனம் நிறையச் சம்பாதிப்பவர்களால் மட்டுமே மகிழ்ச்சிக் குறியீடு தீர்மானிக்கப்படுகிறது.
* பணம் பாதாளம் வரை பாயுமா?
பாதாளச் சாக்கடை வரை பாயும்.
* சுயமரியாதை, சுயமோகம் என்ன வேறுபாடு?
தன்னை மதிப்பதும், சுயமதிப்பைக் குறைத்துக் கொள்ளாமல் இருப்பதும் சுய மரியாதை.
சுயத்தை வியப்பதும், சுயத்தை மட்டுமே மதிப்பதும் சுயமோகம்.
* அறியாமை ஆபத்தானதோ?
நம் அறியாமையை அறியாமையே ஆபத்து.
* சிலருடைய கூந்தல் மட்டும் ஏன் அலை அலையாக இருக்கிறது?
கடற்கரையோரம் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக