--ஆசிரியர் : முது முனைவர்.வெ.இறையன்பு --நூல் :தோன்றியதென் சிந்தைக்கே... --முதல் பதிப்பு:மார்ச்-2021 --வெளியீடு :கற்பகம் புத்தகாலயம், சென்னை-17, போன்:9444012676, 044-24314347

ஆசிரியர் : முது முனைவர்.வெ.இறையன்பு --நூல் :தோன்றியதென் சிந்தைக்கே... --முதல் பதிப்பு:மார்ச்-2021 --வெளியீடு :கற்பகம் புத்தகாலயம், சென்னை-17, போன்:9444012676, 044-24314347. செல்வச் செழிப்பையும், வறுமை நிலையையும் மெழுகி சமமாக்கி விடுகிறது. இருளில் அழகும் அவலட்சணமும் மறைந்து விடுகின்றன. * உண்மையில் பல பிசாசுகள் அதிக வெளிச்சத்தில்தான் நடமாடுகின்றன. * இரவை இரவாகப் பார்க்க மனிதனுக்குச் சம்மதமில்லை. * இருளில்லாத பகல் சாத்தியமா! வெளிச்சமே சகல நேரமும் வியாபித்தால் அனைத்து உயிர்களும் ஆவியாகி விடுமே! அப்போது எப்படிக் கேட்கும் பறவைகளின் பாடல், வண்டுகளின் ரீங்காரம், தேனீக்களின் ஓசை! * பிறப்பே இருளில் தொடங்கும் விளையாட்டு. கருவறையின் இருட்டு வளர வைக்கிறது, கல்லறையின் இருட்டோ சிதைய வைக்கிறது. * இருள் மேன்மையானது. மனத்தை அமைதிப்படுத்த கண்களை மூடி வெளிச்சத்தைத் தடை செய்கிறது. கண்களை மூடும்போதே இனிய இசையில் முழுமையாகக் கவனம் செல்கிறது. * இருட்டு விழிப்புணர்வை அதிகரிக்கிறது. அதில் விரல்களே விழிகளாகி விடுகின்றன. * தாயின் மடியைவிடச் சிறந்த தொட்டில் எது?

கருத்துகள்