ஆசிரியர் : முதுமுனைவர். வெ.இறையன்பு --நூல் :தோன்றியதென் சிந்தைக்கே... --முதல் பதிப்பு:மார்ச்-2021 --வெளியீடு :கற்பகம் புத்தகாலயம், சென்னை-17, போன்:044-24314347

ஆசிரியர் : முதுமுனைவர். வெ.இறையன்பு --நூல் :தோன்றியதென் சிந்தைக்கே... --முதல் பதிப்பு:மார்ச்-2021 --வெளியீடு :கற்பகம் புத்தகாலயம், சென்னை-17, போன்:044-24314347 மாணவர்களிடம் பெட்டிக்கு வெளியே சிந்திப்பதை ஊக்குவிக்கும்போதுதான் அவர்கள் புதியன கண்டுபிடிக்க முயல்வார்கள். * நமக்குள் ஏற்கெனவே இருக்கிற, நம்மால் எழுத முடியாத ஒரு புத்தகத்தைத் தேடியே நூலகத்திற்குச் செல்கிறோம். நமக்குத் தேவைப்படும் ஒரு வரிக்காகவே புத்தகம் முழுமையையும் வாசிக்கிறோம். * நம்முடைய தேடலில் நிறைவு செய்ய ஞானத்திற்காகவே ஆசான்களைத் தேடி அலைகிறோம். * நமக்குள் இருக்கும் மனத் தயாரிப்புக்குரிய மகிழ்ச்சியை எதிர்பார்த்தே பயணம் செய்கிறோம். * ஒரே ஒரு புன்னகையாவது உண்மையாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பில் தொடர்ந்து புன்னகைக்கிறோம். * நமக்குள் இருக்கும் இசையைக் கேட்பதற்காகவே பாடல்கள் கேட்கிறோம். * நமது நீட்சியாகவே உலகத்தைப் பார்க்கிறோம், நம்மிலிருந்து நம் உலகம் தொடங்குவதால். நமக்குள் தேட மறந்து எல்லாவற்றிலும் நம்மைத் தேடுகிறோம். * நடந்தவற்றை நினைத்துப் பிரமிக்காமல் இருப்பதும், நிகழ்ந்தவற்றை எண்ணி வியக்காமல் இருப்பதுமே வளர்ச்சி. * நம்மை நாமே கடந்து போவதே நல்ல வாழ்க்கை. --

கருத்துகள்