ஆசிரியர் : முனைவர். வெ.இறையன்பு --நூல் :தோன்றியதென் சிந்தைக்கே... --முதல் பதிப்பு:மார்ச்-2021 --வெளியீடு :கற்பகம் புத்தகாலயம், சென்னை-17, போன்:044-24314347

ஆசிரியர் : முனைவர். வெ.இறையன்பு --நூல் :தோன்றியதென் சிந்தைக்கே... --முதல் பதிப்பு:மார்ச்-2021 --வெளியீடு :கற்பகம் புத்தகாலயம், சென்னை-17, போன்:044-24314347 * 'நாமே முழுமை இல்லை, நம்மிடம் ஆயிரம் குறைபாடுகள் உண்டு' என்பதை உணர்பவர்களே எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முடியும். * நல்ல பக்கங்களை ஒதுக்கிவிட்டுக் குறைபாடுகளை பூதக் கண்ணாடி கொண்டு பார்ப்பவர்கள் உடலில் அமிலம் அதிகமாய்ச் சுரக்கும். * குறைபாடுகள் கொண்டதுதான் வாழ்க்கை. பிறை போன்ற குறையை முழு நிலவாகச் சித்திரிக்கும் போதுதான் உடல் நமக்கிறது, உள்ளம் தொங்குகிறது. * நம் குழந்தைகளை ஒட்டியே சமயத்தில் தோற்றத்தை வடிவமைத்துக்கொள்ள வேண்டும். * பயன்படுத்தும்போது அது அதிகாரமல்ல, பொறுப்புணர்வு. துஷ்பிரயோகம் செய்யும்போதுதான் அது அதிகாரமாக ஆகிறது. * பெண் தெய்வங்களை வழிபடும் தேசத்தில்தான் பெண்மைக்கான சுதந்தரம் மறுக்கப்படும் இடங்களும் இருக்கின்றன. * கடந்த காலத்திலேயே தொலைந்து விடுகிறவர்கள் நாம். * இயற்கையை ரசிப்பதென்றால் என்ன? அல்லியை மட்டுமல்ல, கள்ளியையும் இயற்கையின் இன்னொரு முகமாய் ஏற்றுக்கொள்வது. * சப்தங்களிலேயே மூழ்கியிருப்பவனுக்கு இயற்கையின் மௌன மொழி கேட்பதே இல்லை. --

கருத்துகள்