18.4.2021 தேதியிட்ட ராணி வார இதழில் மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முது முனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-*

18.4.2021 தேதியிட்ட ராணி வார இதழில் மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முது முனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-* * தலையீடு, குறுக்கீடு என்ன வேறுபாடு? 'பெருந்தலைகள்' உள்ளே புகுந்து...உள்ளதைக் கெடுப்பது தலையீடு. தறுதலைகள், திட்டத்தை செயல்பட விடாமல் தடுப்பது குறுக்கீடு. * கலைஞர்கள் ஏன் நம்மைப் போல நேரக்கட்டுப்பாட்டிற்கு தம்மை உட்படுத்துவதில்லை? அவர்கள் கடிகாரத்திற்குக் கைகட்டினால் மண்ணில் நடக்க மட்டுமே முடியும். கனவுகளில் சஞ்சரிப்பவர்கள் தங்களுக்கான கடிகாரத்தைத் தாங்களே நிர்ணயித்துக் கொள்வதால் விண்ணில் சிறகடித்துப் பறக்கிறார்கள். * 'ரம்' முக்கும், 'ரம்மி' க்கும் என்ன பொதுத்தன்மை? போதையை ஏற்படுத்துவது. * இலக்கியம் படைப்பவர்களை 'வாதி' என விகுதி சேர்த்து அழைத்தால் விமர்சகர்களை என்ன விகுதி சேர்த்து அழைப்பது? 'பிரதிவாதி' என்ற விகுதி சேர்த்து. * 'அமரர்', 'அமரத்துவம்' என்ன வேறுபாடு? ஒருவர் அமரராகாமலே அமரத்துவம் பெற முடியும்.

கருத்துகள்