18.4.2021 தேதியிட்ட(இந்த வார) ராணி வார இதழில் மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-*

18.4.2021 தேதியிட்ட(இந்த வார) ராணி வார இதழில் மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-* * சொத்து சுகம் என்று ஏன் சேர்த்துச் சொல்கிறார்கள்? தவறான வழியில் சொத்து சேர்ந்தவர்கள் எப்போது வேண்டுமானாலும் வழக்கு வரலாம் என்ற அச்சத்தில் சுகமாக இருப்பதில்லை. * கோப்புகளில் சுவாரசியம் சேர்க்க முடியுமா? நிவாரண உதவி கொடுக்க முகாம் செல்ல அனுமதி கேட்டு சார்நிலை அலுவலர் அனுப்பிய கோப்பில் மேலதிகாரி: 'சென்று வருக! இன்றே தருக' என்று எழுதி அனுமதித்தார். * 'புண்படுத்தவே கூடாது' என நம் தவறுகளையும் சுட்டிக்காட்டாத நண்பர்கள் பற்றி? அவர்கள் புண்படுத்தாத நண்பர்கள் அல்லர்; நம்மை பண்படுத்தாத நண்பர்கள். * 'சேவை' மனப்பான்மைக்குப் பிரசித்தமான ஊர் எது? சாத்தூர். * நதிகளுக்கு ஏன் பெண்களின் பெயர்கள்? பிரம்மபுத்திராவைத் தவிர மற்ற நதிகளுக்குக்கெல்லாம் பெண்களின் பெயர்கள். மென்மையாய் இருந்தாலும் தொடர்ந்து ஓடி சொரசொரப்பான கற்களையும் வழவழப்பாக மாற்றும் வல்லமை நதிகளுக்கு இருக்கின்றன. முரட்டு மனிதர்களையும் முட்களை உதிர்க்கச் செய்யும் மேன்மை பெண்மைக்கு உண்டு. இயல்பில் ஒத்ததால் நதிகளுக்கும் பெண்களின் பெயர்களே பொருத்தமென்று பெரியோர் கருதினர். * மன்னிக்க முடியாத குற்றம் எது? தவறு செய்தவர் எவ்வளவு வருந்தினாலும் 'மன்னிக்கவே மாட்டேன்' என்று பிடிவாதமாக இருப்பது.

கருத்துகள்