18.4.2021 தேதியிட்ட ராணி வார இதழில் மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-*
18.4.2021 தேதியிட்ட ராணி வார இதழில் மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-*
* பொறுமையை வளர்த்துக்கொள்ள என்ன வழி?
சில திரைப்படங்களை நகராமல் அமர்ந்து பார்த்தால் போதும்.
* சமூக அக்கறை எப்படித் தொடங்குகிறது?
பக்கத்து வீட்டுக்கு உதவத் தொடங்குவதிலிருந்து!
* குறிக்கோளும், நோக்கமும் ஒன்றுதானே!
இல்லை.
குறிக்கோள் என்பது, மனத்தின் அடியில் வேட்கையை வண்டலாய்ப் பதிவுசெய்யும் உந்துதல்.
நோக்கம் என்பது, பற்றில்லாத மகிழ்ச்சியை உள்ளடக்கியது.
பரிசுக்காக வில்வித்தையைக் கற்பது குறிக்கோள். அம்பு எய்கிற சுகத்திற்காக வில்லை இயக்குவது நோக்கம்.
* சகிப்புத்தன்மை என்றால் என்ன?
உள்ளுக்குள் கோபமாய்க் கொந்தளிப்பும்,கொதிப்பும்... வெளியே பாசாங்காய்ப் பூரிப்பும், சிரிப்பும்.
* 'கொட்டு', 'குட்டு' என்ன வேறுபாடு?
கொட்டுவது முரசை.
குட்டுவது தலையை.
ஒன்றில் வருவது இசை; இரண்டாவதில் வருவது இம்சை.
* சுற்றுலாவுக்கும், சுற்றுச்சூழலுக்கும் என்ன தொடர்பு?
சிலர் சுற்றுலா சென்றால் சுற்றுச்சூழலுக்குத் தலை சுற்றத் தொடங்கிவிடும்.
கருத்துகள்
கருத்துரையிடுக