மதுரை திருவள்ளுவர் மன்றத்தில் தமிழ்த் தேனீ இரா .மோகன் நினைவு அறக்கட்டளை விழா ! படங்கள் கவிஞர் இரா .இரவி !

மதுரை திருவள்ளுவர் மன்றத்தில் தமிழ்த் தேனீ இரா .மோகன் நினைவு அறக்கட்டளை விழா ! படங்கள் கவிஞர் இரா .இரவி ! மலரும் நினைவுகள் ! தமிழ்த் தேனீ இரா .மோகன் அவர்கள் காலம் சென்ற சில தினங்களில் பேராசிரியர் இ .கி .இராமசாமி அவர்கள் உறவினரை வழியனுப்ப விமான  நிலையம் வந்து இருந்தார்கள் .வந்தபோது தமிழ்த் தேனீ இரா .மோகன் அவர்கள் மறைவு குறித்து கவலை தெரிவித்து விட்டு .அவர் சொல்லி ஒன்று மட்டும்  செய்யவில்லை.என்றார்கள் .என்ன ?என்று கேட்டேன் .மதுரை திருவள்ளுவர் மன்றத்தில் ஒரு அறக்கட்டளை நிறுவ வேண்டினார் .அதை செய்யவில்லை .அந்த மன்றம் எப்படி ? என்று கேட்டார் .செயல்பாடு மிக்க நல்ல மன்றம் உடனடியாக அறக்கட்டளை நிறுவுங்கள் .என்றேன் .சரி. அவர்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்றார் .உடன் மன்றத்தின்  தலைவர் ராஜேந்திரன் அவர்களுக்கு தகவல் தந்தேன் ..பேராசிரியர் இ .கி .இராமசாமி அவர்களின் இல்லம் சென்றார் .பேராசிரியர் இ .கி .இராமசாமி ரூபாய் 25,000 காசோலை வழங்கினார் தமிழ்த் தேனீ இரா .மோகன் நினைவு அறக்கட்டளை தொடங்கினார் .இன்று இரண்டாவது நிகழ்வு நடந்தது .சிறப்புரையாளர் தேர்தல் பணி காரணமாக வர இயலவில்லை .பேராசிரியர் நிர்மலா மோகன் அவர்களும் பேராசிரியர் இ .கி .இராமசாமி அவர்களும் சிறப்புரையாற்றினார்கள் . --

கருத்துகள்