ஆசிரியர்;முதுமுனைவர். வெ.இறையன்பு இ .ஆ .ப . நூல்:தோன்றியதென் சிந்தைக்கே...

ஆசிரியர்;முதுமுனைவர். வெ.இறையன்பு இ .ஆ .ப . நூல்:தோன்றியதென் சிந்தைக்கே... முதல் பதிப்பு:மார்ச்-2021 வெளியீடு :கற்பகம் புத்தகாலயம், சென்னை-17, போன்:044-24314347 தண்டனையின் நோக்கம் விளைவுதானே தவிர, கையை உயர்த்தும் வேகத்தில் எந்தப் பயனும் இல்லை. * மகத்தான மனிதர்களும் தவறு செய்யவே நேர்கிறது.அவர்கள் அதை இழைக்கும்போது தவறு என்று தெரியாமல் சாமர்த்தியம் என்று நினைத்துக்கொள்கிறார்கள். அதில் வந்து சேர்கிறது வினை. * மன்னன் உயிருக்கிருக்கும் மரியாதை உயிலுக்கு இருப்பதில்லை. * இருத்தலுடன் இரண்டற ஒன்றுபவர்கள் அந்த மகத்தான இருத்தலின் மேன்மையையும் தரித்துக்கொள்கிறார்கள். * எல்லாப் பயிற்சிகளும் புன்னகையும் சேரும்போது பொலிவு பெற்று விடுகின்றன.

கருத்துகள்