படித்ததில் பிடித்தது .கவிஞர் இரா .இரவி

படித்ததில் பிடித்தது .கவிஞர் இரா .இரவி பழைய சோறு போதும்... அறுவை சிகிச்சைக்கு குட்பை... அசத்தும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை------------------- ! பழைய சோறை தினமும் காலையில் உண்டால், குடல் சார்ந்த பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கிறது என்றும் .......... அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் இருக்கும் நோயாளிகளை அறுவை சிகிச்சை செய்யாமலே ...................... பழைய சோறு காப்பாற்றி வருவதாக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்...........! தற்காலிக நவீன உணவு வகைகளால் குடலுக்குக் கிடைக்க வேண்டிய தாது, இரும்பு, நார் சத்து மட்டுமல்லாமல் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களும் கிடைக்காத காரணத்தால்............. குடல் சார்ந்த பிரச்னைகள், மலச்சிக்கல், தூக்கமின்மை, செரிமான கோளாறு, மன அழுத்தம் என்று பல்வேறு நோய்கள் நம்மைத் தேடி, அழையா விருந்தாளியாக வந்து சேர்கின்றன...........! அரசு ஸ்டான்லி மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள்---------------- அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்குக் குடல் சார்ந்த பிரச்னைகளுக்காக வரும் நோயாளிகளைக் கொண்டு ---------- பழைய சோறு குறித்த ஆராய்ச்சி ஒன்றை நடத்தியுள்ளனர்......! அந்த ஆராய்ச்சியில், நாம் சாதாரணமாக நினைக்கும் பழைய சோறில் உடலுக்கு நன்மை பயக்கும் லாக்டோ பேசிலஸ்... ஈஸ்ட், பைடோ பேக்டிரியல், ஸ்டெப்சோ, சேக்ரோ மைசிஸ் ஆகிய நுண்ணியிர்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். . . . . . ! நம் உணவில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் இல்லாததினால்தான் பலவித குடல் சார்ந்த வயிற்றுப் பிரச்னைகள் ஏற்படுகின்றன என்பதையும் கண்டறிந்துள்ளனர்............! பழைய சோறு மூலம் கிடைக்கப்பெறும் பாக்டீரியாக்கள் மூலம் பலரது குடல் சார்ந்த பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்----------------! மேலும், குடல் சார்ந்த நோய் மட்டுமல்லாமல், தற்கால மனிதர்களை ஆட்டிப்படைத்து வரும் ....... நீரிழிவு நோய்க்கும் பழைய சோறு அருமருந்தாகச் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.......! பழைய சோறில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாவால் இரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவு அதிகரித்திருப்பதையும் கண்டுபிடித்துள்ளனர்......! இந்த நிலையில்.... அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் இரைப்பை குடல் அறுவை சிகிச்சை துறைக்கு.... அரசு 2.7 கோடி நிதி ஒதுக்கி, பழைய சோறில், மேலும் நன்மை பயக்கும் பாக்டீரியாவைக் கண்டுபிடித்து.... ஆராய்ச்சியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல maldi-tof என்ற இயந்திரமும் வாங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.....! எது எப்படியோ... நவீன கால வாழ்க்கையில் மறக்கடிக்கப்பட்ட நன்மை பயக்கும் பழைய சோறை மீண்டும் நினைவுகொள்ள வைத்துள்ளது இந்தப் புதிய ஆராய்ச்சி முடிவு ! தினமும் காலை உணவாகப் பழைய சோறு, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை உண்டு.... ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிகாண்போம்

கருத்துகள்