28.3.2021 தேதியிட்ட(இந்த வார) ராணி வார இதழில் மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-*
28.3.2021 தேதியிட்ட(இந்த வார) ராணி வார இதழில் மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-*
* மனிதன் எப்போது முழுமையடைகிறான்?
பொது வாழ்வைப் பொருத்தவரை, சொல்லும் செயலும் ஒரே மாதிரி இருக்கும்போது.
* 'மொட்டைக் கடிதாசி' என்பது சரியா?
தலையே இல்லாத, அடையாளம் காண முடியாதவாறு எழுதப்படுகிற அநாமதேயக் கடிதங்களை 'மொட்டைக் கடிதாசி' என்பதைவிட 'முண்டக் கடிதாசி' என அழைப்பதுதான் பொருத்தம்.
* எழுதுகிற விதத்தால் பொருள் வேறுபடுமா?
'ஒரு மாதிரி மனிதன்' என்பதற்கும் 'ஒருமாதிரி மனிதன்' என்பதற்கும் எத்தனை வேறுபாடு.
* படித்ததுபடி நடக்காதவர்களைப் பற்றி...?
நான் என்ன சொல்ல முடியும்! நான் படித்தது 'வேளாண்மை'. செய்வது 'மேலாண்மை'.அதனால் தான் இளைஞர்கள் இதயத்தில் நம்பிக்கை நாற்றுகளையாவது நட முடியுமா என்று முயல்கிறேன்.
* அதிகாரி, அரசியல்வாதி...இவர்களிடம் மக்களின் எதிர்பார்ப்பு என்ன?
விதிகளைச் சிறிதும் மீறாமல் செயல்படுபவரை மக்கள் 'நல்ல அதிகாரி' என்பர்.விதிகளை வளைத்தாவது சமயத்தில் உதவுகிறவரை 'நல்ல அரசியல்வாதி' என்பர்.
கருத்துகள்
கருத்துரையிடுக