21.3.2021 தேதியிட்ட ராணி வார இதழில் " மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-

21.3.2021 தேதியிட்ட ராணி வார இதழில் " மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-* * படைப்பாளர்கள் படைப்பின் மூலம் நம்முடன் வாழ்கிறார்களே, அது பற்றி...? படைத்தவர் பெயர் தெரியாமல் பயன்படுத்தும் பொருட்களே அதிகம். * அனாதை, அனாதி என்ன வேறுபாடு? தொடக்கம் இல்லாதது 'அனாதி'. தொடக்கம் தெரியாதது 'அனாதை'. * அழுகை...பலவீனத்தின் வெளிப்பாடா? அழுகையில் பல வகை உண்டு.தேம்பித் தேம்பி அழுவது, புலம்பி அழுவது, ஊரைக்கூட்டி ஒப்பாரி வைப்பது என எத்தனையோ வகைகளில் நாம் அழுவதைப் பார்க்கிறோம்.அழும்போது மனம் கனமிழக்கிறது.உடலில் மன அழுத்தத்தால் சுரக்கும் நச்சுப்பொருட்கள் கரைகின்றன.அழுவதையும் வெறுமனே கண்கலங்கி கம்பீரமாகச் செய்பவர்கள் உண்டு. * மா, பலா, வாழை உணர்த்தும் தத்துவம் என்ன? உரித்தாலே சுவை தருகிறது வாழை. பறித்தாலும் தோலை நீக்கினால் தித்திக்கிறது மா. பக்குவப்படுத்தி படிப்படியாக உள்ளே நுழைந்தால் சுவை தருகிறது பலா. இனிமையை நுகர முயற்சிகள் வெவ்வேறு விதமாகத் தேவைப்படுகின்றன. * கோடிட்ட இடங்களை நிரப்பத் தெரியவிட்டால் அறிவீனமா? மேடிட்ட இடங்களையே மென்மேலும் மேடாக்குவதுதான் அறிவீனம்

கருத்துகள்