21.3.2021 தேதியிட்டராணி ராணி வார இதழில் " மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-*
21.3.2021 தேதியிட்டராணி ராணி வார இதழில் " மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-*
* தாய்மையைவிட உன்னதமானது எது?
பெற்றுவிடுகிற தாய்மையைவிட ஊட்டி வளர்க்கிற தாயுள்ளம் பெரிது. தத்தெடுத்த குழந்தைகளைத் தன் குழந்தைகள்போல உணவூட்டி அனாதைகள் என்ற சுவடு தெரியாதபடி அரவணைத்து வளர்க்கும் தாயுள்ளம் உயிரியல் விபத்தால் உண்டாகும் தாய்மையிலும் மேன்மையானது.
* எல்லோரையும் திருப்திப்படுத்த முடியுமா?
சொர்க்கத்தையே கொடுத்தாலும் சொண்டு சொல்பவர்கள் உண்டு.
* சுறுசுறுப்புக்கும்,வெற்றிக்கும் தொடர்பு உண்டா?
கொசுக்களும் சுறுசுறுப்பாக இருக்கின்றன;
தேனீக்களும் சுறுசுறுப்பாக இருக்கின்றன.
ஒன்று, சுரண்டுவதற்கான சுறுசுறுப்பு.மற்றொன்று, மகரந்தச் சேர்க்கைக்கான அணிவகுப்பு.
நோக்கத்தால் சுறுசுறுப்பு அருவருப்பா, பரபரப்பா என அனுமானிக்கப்படுகிறது.
* அதிகப்படியான சிந்தனை நன்மையா,தீமையா?
அரைகுறையாகச் சிந்திப்பதைவிட ஆபத்தானது அதிகம் சிந்திப்பது. சிந்திப்பதிலேயே ஆற்றல் சிந்தி சிதறி விட்டால் செயல்பட முடியாமல் போய்விடும்.
* மறைவுக்குப் பின் எப்படிப்பட்ட அடையாளம் நமக்குத் தேவை?
கடையாணியைப் போலக் கடமையாற்றுபவர்கள் அடையாளத்தைத் தேடி ஆளாய்ப்பறப்பதில்லை.
கருத்துகள்
கருத்துரையிடுக