21.3.2021 தேதியிட்ட ராணி ராணி வார இதழில் " மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-*
21.3.2021 தேதியிட்ட ராணி ராணி வார இதழில் " மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-*
* சமரசம் இல்லாமல் வாழ முடியுமா?
காற்றோடு செய்யும் சமரசம் விசிறி;
கடலோடு செய்யும் சமரசம் கப்பல்;
மழையோடு செய்யும் சமரசம் கூரை;
மணலோடு செய்யும் சமரசம் வீடு;
நாடுகளே ஒப்பந்தத்தின் பெயரால் சண்டையை முடுக்கி சமரசம் செய்யும்போது தனி மனிதர்கள் சமாதானமாய்ப்போக சமரசம் செய்வதில் தவறு இல்லை.
* குளிர்காலத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும்?
குளிரைக் குளிரால் எதிர்கொள்ள வேண்டும். குளிர்காலத்தில் குளிர்ந்த நீரால் குளிப்பவர்களுக்குக் குளிரும் குதூகலம். கதகதப்பான உடையைவிட தகதகப்பான மனம் முக்கியம்.
* எது நல்ல ஓய்வு?
கட்டாய அட்டவணையின்றி...பிடித்த நேரத்தில் உண்பதும், உறங்குவதுமே ஓய்வு.
* உயர்ந்த இலக்கிற்கும், நிறைவேறாத இலக்கிற்கும் உள்ள வேறுபாடு?
உயர்ந்த இலக்கு(overarching goal)நம்முடைய பயன்படுத்தப்படாத ஆற்றலையும், திரட்ட முடிந்த வைராக்கியத்தையும் அடிப்படையாகக்கொண்டு நிர்ணயிக்கப்படுவது. நிறைவேறாத இலக்கு(unrealistic goal)என்பது முதல் அடியிலேயே மொட்டை மாடிக்குச் செல்ல முற்படுவது.
கருத்துகள்
கருத்துரையிடுக