21.3.2021 தேதியிட்ட(இந்த வார) ராணி வார இதழில் மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-

21.3.2021 தேதியிட்ட(இந்த வார) ராணி வார இதழில் மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-* * இதயம்,மூளை...எது சொல்வது சரி? முதலில் சொல்வது இதயம்; முடிவில் சொல்வது மூளை. சில நிகழ்வுகளில் முதலில் தோன்றுவதே முத்தாய்ப்பாய் அமைவது உண்டு. * திரண்ட சதைக்கும், ஊளைச் சதைக்கும் என்ன வேறுபாடு? உடல் உழைப்பால் வருவது திரண்ட சதை; தக்கை உணவால் வருவது ஊளைச்சதை. ஒன்று உழைப்பின் வெளிப்பாடு; இன்னொன்று சோம்பலின் குறியீடு. * ஒரு மனிதரின் வெற்றியை எதைக் கொண்டு அளப்பது? முயற்சியின் அளவை வைத்து; குன்றில் ஏறி குதூகலிப்பதைவிட இமயத்திற்கு முயன்று இடறிவிழுவது மேல். சொர்க்கத்தை வைத்து; சுயத்திற்காகப் பதக்கங்களை ஏந்துவதைவிட மானுடத்திற்காகத் தழும்புகளைத் தாங்குவது மேல். * சரித்திரத்தைப் பூகோளம் நிர்ணயிக்கிறதா? படையெடுப்பை பழங்காலங்களில் பூகோளம் நிர்ணயித்தது. தாக்குதலைத் தற்சமயம் தொழில்நுட்பம் தீர்மானிக்கிறது. * 'கொடுப்பினை' என்றால்... எவ்வளவு முயற்சி எடுத்து உதவினாலும் சிலர் முன்னேறாமல் மூழ்கி விடுவார்கள். சிலரோ நூலை நீட்டினாலும் அதைக் கயிறாக மாற்றி கரைசேர்ந்து விடுவார்கள்.

கருத்துகள்