ஆசிரியர் : முனைவர். வெ.இறையன்பு --நூல் :தோன்றியதென் சிந்தைக்கே... --முதல் பதிப்பு:மார்ச்-2021 --வெளியீடு :கற்பகம் புத்தகாலயம், சென்னை-17, போன்:044-24314347

ஆசிரியர் : முனைவர். வெ.இறையன்பு --நூல் :தோன்றியதென் சிந்தைக்கே... --முதல் பதிப்பு:மார்ச்-2021 --வெளியீடு :கற்பகம் புத்தகாலயம், சென்னை-17, போன்:044-24314347 * உழைக்காமல் உண்பவர்கள் எல்லோருமே திருட்டுக் காகங்கள்தான். * நாமும் தக்கையால் நம்மை நிறைத்துக்கொண்டு பயமுறுத்துவதையே பழக்கமாக்கிக் கொண்டோம். * வாழ்வதற்கும், வாழ்வதைப்போல இருப்பதற்கும் வேறுபாடு தெரியாமல் நகரும் தக்கை வாழ்க்கை. * கடிகாரத்தைக் கல்யாணம் செய்துகொண்டு கடுகடுக்க காலத்தைக் கழிப்பவர்கள் நாம். * நம்மிடம் யார் வழிகேட்டு வந்தாலும் அன்பைக் கலந்து வழி காட்டலாம். அந்த இடம் அவர்களுக்குப் போதி மரமாகவும் இருக்கலாம். * மொத்துவதால் கிடைக்காத ஞானம் முத்தத்தால் கிடைத்து விடுகிறது. மன்னிப்பைவிட பெரிய தண்டனை எது? * நிஐங்கள் சுடும்போது நிழல்களே ஆறுதல் தருகின்றன. * இன்று பவருடைய நேசம் மூளையிலிருந்தே சகலத்தையும் கணக்குப் போட்ட பிறகு முளைக்கிறது. * பணியை மட்டுமே அடையாளமாகக் கருதும் உலகில் பண்பாடு மறைந்து விடுகிறது. -

கருத்துகள்