ஆசிரியர் : முதுமுனைவர். வெ.இறையன்பு --நூல் :தோன்றியதென் சிந்தைக்கே... --முதல் பதிப்பு:மார்ச்-2021 --வெளியீடு :கற்பகம் புத்தகாலயம், சென்னை-17, போன்:044-24314347
ஆசிரியர் : முதுமுனைவர். வெ.இறையன்பு
--நூல் :தோன்றியதென் சிந்தைக்கே...
--முதல் பதிப்பு:மார்ச்-2021
--வெளியீடு :கற்பகம் புத்தகாலயம், சென்னை-17, போன்:044-24314347
ஒவ்வொரு பொருளை வாங்கும்போதும் அதோடு சுமையையும், கவலையும் சேர்த்து வாங்குகிறோம் என அப்போது தெரிவதில்லை.
* சில மனிதர்கள் தொடர்பு கொள்ளும்போது எத்தனை பணிகள் இருந்தாலும் தட்டத்தான் முடிவதில்லை.
* நடந்ததற்குச் சமாதானம் சொல்லிக்கொள்வதே இன்றைய சூழலில் வாழ்க்கையாக நகர்கிறது.
* எப்போதாவது கிடைத்தது நமக்கு இனித்தது.அவர்களுக்கு எப்போது வேண்டுமானால் கிடைப்பது திகட்டுகிறது.
* எதையும் அளவோடு பயன்படுத்த முதிர்ச்சியும், பக்குவமும் வேண்டும்.
* கிடைப்பதை ஏற்றுக் கொள்வதும், ஆசைகளைச் சுருக்கிக்கொள்வதும், அடுத்தவர்களுடன் ஒப்பிடாமல் இருப்பதும் நமக்குக் கைகூடினால் நம் மகிழ்ச்சியை யாராலும் களவாட முடியாது.
* இலக்கைத் துரத்தும் அவசரத்தில் மகிழ்ச்சியை இழந்து விடுபவர் பலர்.
* நம்மைக் காயப்படுத்திய மனிதரே பலமுறை கனிவு காட்டியதைக் காட்சிப்படுத்தினால் கவலைகள் கரையும்.
* மயக்கமில்லாத மன நிலையில் மட்டுமே மனத்தைச் சுத்திகரிக்க முடியும்.
கருத்துகள்
கருத்துரையிடுக