ஆசிரியர் முது முனைவர். வெ.இறையன்பு நூல் :தோன்றியதென் சிந்தைக்கே... முதல் பதிப்பு:மார்ச்-2021 வெளியீடு :கற்பகம் புத்தகாலயம், சென்னை-17, போன்:044-24314347

ஆசிரியர் முது முனைவர். வெ.இறையன்பு நூல் :தோன்றியதென் சிந்தைக்கே... முதல் பதிப்பு:மார்ச்-2021 வெளியீடு :கற்பகம் புத்தகாலயம், சென்னை-17, போன்:044-24314347 உழைப்பிற்குப் பெற்றால் ஊதியம்; இல்லாவிட்டால் அது பிச்சை. தகுதியால் பெற்றால் விருது; அன்றில் அது திருட்டு. * சுயமாக எழுதினால் படைப்பு; வேறொருவர் உபயம் தந்தால் பொய்க் குழந்தை. * முடிவு மட்டுமல்ல, முறையும் முக்கியமாகிறது முன்னேற்றத்திற்கு. * மன்னிப்பு என்ற சொல் மானுடத்திற்கு மகுடம் சேர்த்த ஒன்று. மகத்துவம் பெற்ற அந்தச் சொல் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் உறவுகள் பிளவுபடும், உள்ளங்கள் உடைந்து விடும். * மன்னிக்க மன்னிக்க மனிதன் உயர்வடைகிறான். * மன்னிக்கக் கற்றுக்கொள்வதே ஞானத்திற்கான முதல் படி. * எளிமையைக் காட்டிலும் பிரம்மாண்டம் வேறெதுமில்லை. * பரம்பரையாகச் சாப்பிடாதவர்களைவிட பழக்கத்தால் சாப்பிட்டதை நிறுத்துவதற்கு அதிக வைராக்கியம் வேண்டும். * முதுமை அடைந்து விட்டோம் என எண்ணாத வரை அதன் பாதிப்பு ஏற்படுவதில்லை.

கருத்துகள்