ஆசிரியர் முதுமுனைவர். வெ.இறையன்பு --நூல் :தோன்றியதென் சிந்தைக்கே... --முதல் பதிப்பு:மார்ச்-2021 --வெளியீடு :கற்பகம் புத்தகாலயம், சென்னை-17, போன்:044-24314347
ஆசிரியர் முதுமுனைவர். வெ.இறையன்பு
--நூல் :தோன்றியதென் சிந்தைக்கே...
--முதல் பதிப்பு:மார்ச்-2021
--வெளியீடு :கற்பகம் புத்தகாலயம், சென்னை-17, போன்:044-24314347
வாசிப்பால் வாழும் மனிதர்கள் சுவாசிப்பதெல்லாம் அரிய கருத்துகளாகவே இருக்கின்றன.
* நாம் தருவதைப் பெற்றுக்கொள்ள யாரும் இல்லை என்னும் சூழல் உருவாகும்போதுதான் கம்பர் சொன்ன ஆதர்ஷ நாடு அகப்படும்.
* விளையாட்டு என்பது நல்லெண்ணத்திற்காக நடத்தப்படுகிற ஒன்று. அதை பகைமையைப் பெரிதாக்கும் மைதானமாக சித்திரிக்க வேண்டிய அவசியமில்லை.
* விளையாட்டை விளையாட்டாகப் பார்க்காவிட்டால் போரை விளையாட்டாகப் பார்க்கத் தொடங்கி விடுவோம்.
* திருக்குறள் பல வண்ணக் காட்சிக்கருவியாக இருக்கிறது. வாசிப்பவர் விழிகளுக்கேற்ப அந்த வானம் தெரிகிறது.
* தோல்வியில் உதிக்கின்றன வெற்றிக்கான வழிகள்.
அவமானங்களில் அரும்புகிறது வைராக்கியத்தின் வேர்.
* இல்லாதபோது புரிகிறது பங்களிப்பு.
இழந்த பிறகு வருகிறது ஞானம்.
* பல விஷயங்கள் மறுக்கப்படும்போதுதான் அவற்றின் அருமையை உணர்ந்து ஞானம் பெறுகிறோம்.
* வாழ்க்கையே நாம் சிரித்த நொடிகளை வைத்துத்தான் கணக்கிடப்படுகின்றது.
* சிரிப்பதைவிட உயர்ந்தது மற்றவர்களை சிரிக்க வைக்கும் பண்பு.
கருத்துகள்
கருத்துரையிடுக