ஆசிரியர் : முதுமுனைவர். வெ.இறையன்பு --நூல் :தோன்றியதென் சிந்தைக்கே... --முதல் பதிப்பு:மார்ச்-2021 --வெளியீடு :கற்பகம் புத்தகாலயம், சென்னை-17, போன்:044-24314347

ஆசிரியர் : முதுமுனைவர். வெ.இறையன்பு --நூல் :தோன்றியதென் சிந்தைக்கே... --முதல் பதிப்பு:மார்ச்-2021 --வெளியீடு :கற்பகம் புத்தகாலயம், சென்னை-17, போன்:044-24314347 நல்ல மனிதர்கள் செய்த உதவியை அடுத்த நொடியில் மறந்து விடுகிறார்கள். அவர்கள் வலது கையும், இடது கையும்கூட அதை அடையாளம் வைத்துக்கொள்வதில்லை. * அச்சத்திலிருந்து விடுபடுவதே உண்மையான விடுதலை. * வரவேற்பறையைப்போல ஓய்வறையும் சுத்தமாக இருக்கும் வீடே சிறந்த வீடு. * மாரிச்சாமிபோல நூறு இளைஞர்கள் நிச்சயம் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை ஒருங்கிணைக்க விவேகானந்தர் இல்லையோ என்று தோன்றுகிறது. * மரணத்தை நம் அன்றாட வாழ்க்கைக்கு நெருக்கமாகக் கொண்டுவந்துவிட வேண்டும். இன்றைய நிகழ்வுகளுக்கே அதைக் கொண்டுவந்து விட்டால் அது எல்லாவற்றிலும் இருக்கிறது என்பதை அறிந்துகொள்வோம். * பழையவற்றை ஆசையோடு அசைபோடும்போதெல்லாம் மரணம் நமக்குள் சின்னதாக நிகழ்ந்து விடுகிறது. * ஒவ்வொரு பிறந்த நாளும் நாம் வயதாவதை உணர்த்துவதைப் போல முதிர்ச்சியாவதையும் உணர்த்தினால் நல்லது.

கருத்துகள்