ஆசிரியர் முதுமுனைவர். வெ.இறையன்பு நூல் ;:தோன்றியதென் சிந்தைக்கே... முதல் பதிப்பு:மார்ச்-2021 வெளியீடு :கற்பகம் புத்தகாலயம், சென்னை-17, போன்:044-24314347
ஆசிரியர் முதுமுனைவர். வெ.இறையன்பு
நூல் ;:தோன்றியதென் சிந்தைக்கே...
முதல் பதிப்பு:மார்ச்-2021
வெளியீடு :கற்பகம் புத்தகாலயம், சென்னை-17, போன்:044-24314347
* பெரும்பாலான மருத்துவச் செலவுகள் சுவையே பிரதானம் என்று கருதுவதால் ஏற்படுகின்றன.
* சமயத்தில் பழைய புத்தகங்களை படித்துப் பார்ப்பதும் சுகமாகவே இருக்கிறது.
* விருப்பமான துறையில் ஈடுபட முடியாததால் மங்கிப்போகும் திறமைகள் அதிகம். இன்று படிப்பே மோட்சத்திற்கான வழி என்பது எல்லாப் பள்ளிகளிலும் போதிக்கப்படும் சூழல்.
* நாம் உடலல்ல, உடல் மட்டுமல்ல என்று உணரும்போதே ஞானம் தொடங்கி விடுகிறது.
* தான் செய்த எந்தப் பணியைப் பற்றியும் மூச்சு விடவில்லை. நான் கூறும்படி கேட்டபோதும் அவற்றை நாசூக்காகத் தவிர்த்து விட்டார். பூர்ணலிங்கம் என்கிற அந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பலருக்கும் முன்னுதாரணம்.
* நல்ல பணிகளைச் செய்ய இருத்தலின் கையில் நாம் ஒரு எழுதுகோல் மட்டுமே என எண்ணும் மேன்மையாளர்கள் இருக்கவே செய்கிறார்கள்.
* படம் முடிந்த பிறகும் அதுகுறித்த நினைவுகள் தொடர்வதே நல்ல படம்.
--
கருத்துகள்
கருத்துரையிடுக