சிரியர் முது முனைவர். வெ.இறையன்பு --நூல் :தோன்றியதென் சிந்தைக்கே... --முதல் பதிப்பு:மார்ச்-2021 --வெளியீடு :கற்பகம் புத்தகாலயம், சென்னை-17, போன்:044-24314347

ஆசிரியர் முது முனைவர். வெ.இறையன்பு --நூல் :தோன்றியதென் சிந்தைக்கே... --முதல் பதிப்பு:மார்ச்-2021 --வெளியீடு :கற்பகம் புத்தகாலயம், சென்னை-17, போன்:044-24314347 இப்போது கணக்கற்ற புகைப்படங்கள் கைப்பேசியோடு நின்றுவிடுகின்றன. * இந்தியா முழுவதும் பயணப்பட்டதில் தமிழகத்தைப்போல விருப்பமுடன் பூச்சூடும் பெண்களைப் பார்க்க முடியாது. * பிறப்பு முதல் இறப்பு வரை பூக்களுக்கு முக்கியத்துவம். வளைகாப்பின்போதே சடை முழுவதும் பூவலங்காரம். பெண்ணைப் பிடித்தால் பூ வைத்தல் தலையை மழித்தால் பூ மாலை, திருமணத்திற்கு மலர் மாலை. * வாழ்க்கை வரை துணையிருக்கிற பூக்கள் முடியும்போது வழியனுப்பவும் வந்து சேர்கின்றன. * உண்மையை எந்த அதிகாரத்தாலும் நிரந்தரமாக மறைத்துவிட முடியாது. * நிறைகுடங்கள் அமைதி காக்கின்றன, காலிக்குடங்கள் கதகளி ஆடுகின்றன. * மகத்தான மனிதர்கள் இன்னும் இருப்பதால்தான் மழை அவ்வப்போது வாசல் தெளித்துவிட்டாவது போகிறது. * கவலைகளை மறக்கச் செய்கிறவர்கள் மனத்தில் அல்லவா சிம்மாசனம் போட்டு அமர்ந்து விடுகிறார்கள்! --

கருத்துகள்