ஆசிரியர் : முனைவர். வெ.இறையன்பு --நூல் :தோன்றியதென் சிந்தைக்கே... --முதல் பதிப்பு:மார்ச்-2021 --வெளியீடு :கற்பகம் புத்தகாலயம், சென்னை-17, போன்:044-24314347
ஆசிரியர் : முனைவர். வெ.இறையன்பு
--நூல் :தோன்றியதென் சிந்தைக்கே...
--முதல் பதிப்பு:மார்ச்-2021
--வெளியீடு :கற்பகம் புத்தகாலயம், சென்னை-17, போன்:044-24314347
சந்திக்க வருகிறவர்களுக்கு சரியான நேரத்தை ஒதுக்கி அவர்கள் அலைச்சலை வீணாக்காதவாறு நடந்துகொள்வது ஒருவகை முதிர்ச்சி.
* அடுத்தவர் நேரத்தை மதிப்பது அவர்களை மதிப்பதன் அற்புத வெளிப்பாடு.
* சுற்றுலாவின்போது பயணிகளுக்கு மாநிலத்தைப் பற்றிய முதல் மதிப்பீட்டை ஏற்படுத்துபவர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள்.
* நதி உற்பத்தியாகுமிடம் சின்னதாகவே இருக்கிறது.
* எல்லோரிடமும் நிறைவேறாதா என ஏங்கும் கனவுகள் நிறையவே இருக்கின்றன.
* சில நேரங்களில் நாம் யாரை அறிமுகப்படுத்தி வைக்கிறோமோ அவர்களோடு இவர்கள் நெருக்கமாகி நம்மைக் கழற்றிவிடுவதும் உண்டு.
* மனிதர்களைக் காரியங்களாகப் பார்க்கிறவர்கள் நேசிக்கப்படுவதில்லை.
* அமைதியாக இருப்பவர்கள் எல்லாம் பேசத் தெரியாதவர்கள் அல்லர்.
--
கருத்துகள்
கருத்துரையிடுக