14.3.2021 தேதியிட்ட(இந்த வார) ராணி வார இதழில் மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-*
14.3.2021 தேதியிட்ட(இந்த வார) ராணி வார இதழில் மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-*
* சேதப்படுத்துகிறவர்கள் திமிராக அலைகிறார்கள், செதுக்குபவர்கள் அமைதியாக இருக்கிறார்களே, ஏன்?
குத்துகிற கத்தியைவிட அறுவைசிகிச்சை கத்தி சன்னமாகவும், சின்னதாகவும் எப்போதும் இருக்கும்.
* கயிறு திரிப்பது உங்கள் ஊரில் அதிகமாமே...
தேங்காய் நாரில் சேலத்து மக்கள் கயிறு திரிப்பது அதிகம்; ஆனால் தேன் தடவிய சொற்களால் அல்ல.
* பெரும் செல்வந்தர்களைப் பார்த்தால் பலருக்கு ஏன் எரிச்சல்?
அவர்கள் தவறாகச் சேர்த்த சொத்தைவிட அதைப் பெருமிதத்துடன் ஆடம்பரமாக வெளிச்சம்போட்டுக் காட்டும்போது அதிக உறுத்தல் ஏற்படுகிறது. 'இது நம்முடைய காசுதானே' என்ற கோபமும் தோன்றுகிறது.
* தேர்வில் ' பொருத்துக ' பகுதியைச் சிறப்பாகச் செய்பவருக்கு எந்தப் பணி பொருத்தம்?
திருமணத் தரகர்.
* பிட்டுப்பிட்டு வைப்பவர்கள் எங்கு அதிகம்?
கேரளாவில்.
* ஒரே ஒரு நாள் அன்பு என்ற பண்பு அனைவரிடமும் மறைந்தால்...?
புவியே நின்றுவிடும். மண் ஈர்ப்பு சக்தியால் அல்ல, கண் ஈர்ப்பு சக்தியால் உலகம் சுழலுகிறது. உணவினால் மட்டுமல்ல, உணர்வினால் மனிதன் உயிர்வாழ்கிறான்
கருத்துகள்
கருத்துரையிடுக