14.3.2021 தேதியிட்ட(இந்த வார) ராணி வார இதழில் " மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-*

14.3.2021 தேதியிட்ட(இந்த வார) ராணி வார இதழில் " மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-* * நீங்கள் கண்டு வியந்த முரண்பாடு... மட்டி வாழை விளைகிற மண்ணில் வாழும் அனைவருமே சுட்டியாக இருப்பது. * பொறுமை...வேகத்திற்கு எதிர்ப்பதமா? இல்லை.பொறுமையாகக் குறிபார்ப்பது, வேகமாக அம்பை எய்து இலக்கை அடைவதற்காக. * எது படாடோபம்? ஓடு ஒழுகும்போது காதுக்குத் தோடு வாங்க கையிருப்பைச் செலவிடுவது. * மன அழுத்தம் உள்ளவர்களை எப்படி அணுக வேண்டும்? மலர்களைக் கையாளுவதைப்போல அணுக வேண்டும். அவர்கள் தங்கள் உள்ள உணர்வுகளை வெளிப்படுத்தும்போது பொறுமையாகக் கேட்க வேண்டும். அவர்கள் கண்ணீரைத் துடைக்கும் கரங்களாகவும்,சாய்ந்துகொள்ள உதவும் தோள்களாகவும் இருந்தால் மன அழுத்தம் மறையும். அவர்கள் மன அழுத்தத்தை இறக்கி வைத்ததும் அதை நாம் சுமந்துகொண்டு அலையக் கூடாது. * ' செல்லாக்காசு ' என்றால் என்ன? பணமதிப்பிழப்பு என்று பொருள்.

கருத்துகள்