14.3.2021 தேதியிட்ட(இந்த வார) ராணி வார இதழில் " மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-*
14.3.2021 தேதியிட்ட(இந்த வார) ராணி வார இதழில் " மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-*
* தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது?
தோல்வியைத் தோல்வி என்று எண்ணாமல் அனுபவம் என்று கருதி அதை நுட்பமாக அலசி ஆராய்ந்தால் அடுத்து வருவது வெற்றியாக இருக்கும்.
* வெகுநாட்களாகச் சில இடங்களைப் பார்க்க வேண்டும் என்ற தணியாத ஆவல் என்ன செய்யலாம்?
அந்த இடங்களை நேரில் பார்க்காமலேயே இருப்பது பொருத்தம். காட்சிப்படுத்தும்போது இருக்கும் பிரம்மாண்டம் கண்களுக்கெதிரே காணாமல் போவது உண்டு .எதிர்பார்ப்பு ஏமாற்றமாக மாறுவது இடங்களுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் பொருந்தும்.
* எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்தால்...?
பெற்றோருக்கு வளர்ப்பது எளிது.
* வருடினால்கூட வலிக்குமா?
வருடப் பயன்படுத்தும் பொருளைப் பொருத்தது வருடல். மயிலிறகால் வருடுவதற்கும், மண்வெட்டியால் வருடுவதற்கும் வேறுபாடு உண்டு.
* திட்டுவது எப்படியிருக்க வேண்டும்?
மின்னல்போல நொடியில் மறைந்துவிட வேண்டும். நெடுநேரம் நீடித்தால் திட்டுவதுகூடத் தித்திக்கத் தொடங்கிவிடும் .
கருத்துகள்
கருத்துரையிடுக