*14.3.2021 தேதியிட்ட ராணி வார இதழில் " மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-*
*14.3.2021 தேதியிட்ட ராணி வார இதழில் " மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-*
* செய்த தவறுகளுக்கு எது பரிகாரம்?
கசிந்துருகி வடிக்கும் கண்ணீரால் கழுவப்படும் களங்கங்கள் அவை.
* தூண்டுவதற்கு ஒருவர் தேவையில்லையா?
சுடர்விளக்காக இருப்பவர்களுக்கே தூண்டுவதற்குத் துணை தேவை. சூரியனாய் இருந்தால் சுயமாய் ஒளிரலாம்; ஆயிரம் அகல்களை ஏற்றலாம்.
* ' கரை சேர்ப்பது ' என்கிற பதத்தை ஏன் பயன்படுத்துகிறோம்?
கப்பலில் பல நாட்கள் பயணம் செய்து பழக்கப்பட்டவர்களுக்குத்தான் கரை தெரியும் போது ஏற்படும் மகிழ்ச்சி புரியும். அடர்ந்த காட்டில் பயணம் செய்வதைவிட ஆழ்ந்த கடலில் பயணம் செய்வது அச்சமானது. வாழ்க்கையும் பெருங்கடலே.அதில் தத்தளிக்காமல், மூழ்கிவிடாமல் நீந்திக் கரை சேர்பவர்கள் மிகவும் குறைவு.
* சிறந்த உணவு எது?
உண்ட பின்பு உறுத்தாமலிருப்பதே உயர்ந்த உணவு.
* உணர்வுசார் நுண்ணறிவு ஆண்களுக்கு அதிகமா?பெண்களுக்கா?
பெண்களுக்குத்தான்.குடும்பம் என்கிற அமைப்பு சிதையாமல் தொடர்வதற்குப் பெண்களின் உணர்வுசார் நுண்ணறிவு காரணம்.

மிகச்சிறந்தபதில்கள்
பதிலளிநீக்கு