இனியநண்பர் தமிழ் இசை ஆசிரியர் தேவாரம் ஓதுவார் கவிஞர் கதிர்பாரதி மடல் .
இனிய தோழமை. டாக்டா் கவிஞா் தமிழ்த்திரு. இரா. இரவி அவா்களுக்கு , வணக்கம் . கதிா்பாரதி நேற்றைய பொழுது "அன்பு இணையதள பண்பலை வானொலி " யில் தங்களின் நேர்காணல் ஒலிபரப்பு கேட்கும் வாய்ப்பு எனக்கு அமைவில்லை . தாங்கள் , இன்று நமது " பாமரன் பைந்தமிழ்ச்சங்கம் " புலனக்குழுவில் பதிவிட்டிருந்த குரல் பதிவினை முழுமையும் ஊடுலை ( Blutooth ) வழியாகக் கேட்டுமகிழ்ந்தேன். நன்று. தாங்கள் வழங்கிய தகவல்கள் ஒவ்வொன்றும் மிகவும் இயல்பாக
இருந்தது . அதே நேரம் அவை தரமாகவும் இருந்தது. வாழ்த்துகள்...!
நிகழ்ச்சித் தொகுப்பாளர் புவனா அவா்கள் , தாங்கள் தரும் பதிலிலிருந்தே கேள்விகளை எழுப்பியது சிறப்பு. அவை ஒருசிறந்த " நிகழ்ச்சித் தொகுப்பாளரிடம் , பத்திரிகையாளர்களிடம் இருக்கவேண்டிய , இருக்கக்கூடிய பண்பாகும் . அவை தொகுப்பாளர் புவனா அவா்களிடம் காணப்பட்டது. சிறப்பு.
அவருக்கும் வாழ்த்துகள்...!
**********
" ஹைக்கூ கவிதைக்காக தாங்கள் பெற்ற சிறப்புமிக்க பட்டம் , பட்டயங்கள் பற்றி , கொஞ்சம் கூறியிருக்கலாம்...? அது நிகழ்சியை கேட்டுக்கொண்டிருந்த, என்போன்ற நேயர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான்....!
***********
**********
" ஹைக்கூ கவிதை " த்திறனுக்காக " கெளரவ டாக்டா் பட்டம் " பெற்றுள்ளீா்கள். கடந்த 2019 - ஆண்டு , தங்களின் " கவிதை எழுதும் ஆற்றலை போற்றும்வகையில் எமது
" பாமரன் பைந்தமிழச்சங்கம் புலனக்குழுமம் சாா்ந்து பாச்சுடா்மணி விருது " வழங்கி சிறப்புசெய்தேன். இதுபோன்று தாங்கள் பெற்ற பட்டம் , பட்டயங்கள் பற்றி நோ்காணலில் பதிவுசெய்திருக்கலாம்..! அவை மற்றவர்களுக்கும் ஊக்கமா அமையும் ...!
****************
நிகழ்ச்சி அமைப்பாளர் , தொகுப்பாளர் தொழில்நுட்பக் கலைஞா்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்
----- கதிா்பாரதி
கருத்துகள்
கருத்துரையிடுக