முது முனைவர்.இறையன்பு இ .ஆ .ப . அவர்களின் கீழ்க்கண்ட நூல்களிலிருந்து அரிய தகவல்களும்,பொன்மொழிகளும்;-
முது முனைவர்.இறையன்பு இ .ஆ .ப . அவர்களின் கீழ்க்கண்ட
நூல்களிலிருந்து அரிய தகவல்களும்,பொன்மொழிகளும்;-
(1) தகவல்கள் எவ்வளவு வலிமையானவையாக இருந்தாலும் அவற்றை எந்த ஊடகங்களில் நாம் பயன்படுத்துகிறோம் என்பது முக்கியம்.
(2) அன்பு என்கிற ஊடகம் சக்தி வாய்ந்தது,அதன் மூலமே அடுத்தவர்களை எளிதில் கவர முடியும்.
----- ' இலக்கியத்தில் மேலாண்மை ' நூலில்.👆
--------- ------- ------- ------ -------- --------
(1) மகத்தான மனிதர்களுக்கு அருகில் இருப்பவர்களும் எளிமையாகவே இருப்பார்கள்.
(2) அதிர்ச்சிகளை எதிர்கொள்ளாமல் பாதுகாப்பாக வளர்வதில் எந்தப் பயனும் இல்லை.
----- ' நாமார்க்கும் குடியல்லோம் ' நூலில்👆
------ ------ ------- ------- ------ ------ -------
(1) திரும்பிப் பார்க்காமல் இருப்பதுதான் துறவு என்றால், அதைச் செய்துதான் தீரவேண்டும்.
(2) பிரபஞ்சமே தாயாக மாறும் அனுபவம்தானே துறவு.
(3) " வாழ்க்கை என்பது நினைவுகளின் தொகுப்பு . . . அவ்வளவுதான். "
----- " சாகாவரம் " நூலில்.☝️
----- ---- ------ ------ ------ ----- ----- --------
(1) நேரத்திற்கு இருக்கும் மகத்துவமே அதைத் திரும்பப் பெற முடியாது என்கிற செய்திதான்.
(2) நம் பயத்திற்குக் காரணமே நேர விரயம் தான்.
-------- 👆 " அச்சம் தவிர் " நூலில்.
---------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக