துபாயில் ஹைக்கூ கவிதை நூல் வெளியீடு
துபாய் :
துபாயில் இனிய திசைகள் வாசகர் வட்டத்தின் சார்பில்
கவிஞர் இரா.இரவி அவர்களின் உதிராப் பூக்கள்
என்ற ஹைக்கூ கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் முஹிப்புல் உலமா அல்ஹாஜ் முஹம்மது
மஹ்ரூப் உதிராப் பூக்கள் நூலை வெளியிட ஈடிஏ அல்குரைர்
நிறுவனத்தின் மார்க்க அறிஞர் காயல் சுலைமான் ஆலிம்
பெற்றுக் கொண்டார்.
உதிராப் பூக்கள் நூல் கவிஞர் இரா. இரவியின் தேர்ந்தெடுத்த
நூறு ஹைக்கூ கவிதைகள் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது.
இதனை கவிஞர் ஆத்மார்த்தி தொகுத்துள்ளார்.
கீழை சலீம் காக்கா, திண்டுக்கல் ஜமால் முஹைதீன்,
வாலிநோக்கம் கலீல் பிலாலி, ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத்
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வேடந்தாங்கல் செல்லாத
இரும்புப் பறவை
விமானம் !
இந்த நூலில் இடம் பெற்றுள்ள ஹைக்கூவில் ஒன்று ஆகும்.
கருத்துகள்
கருத்துரையிடுக