திருமங்கலம் இறையன்பு நூலக விழா.படங்கள் திருமங்கலம் புகைப்படக் கலைஞர் குழந்தை ராஜீ கை வண்ணம்.

திருமங்கலம் இறையன்பு நூலக விழா.படங்கள் திருமங்கலம் புகைப்படக் கலைஞர் குழந்தை ராஜீ கை வண்ணம். 21.2.2021 மதுரை திருமங்கலத்தில், முதுமுனைவர் இறையன்பு அவர்களின் பெயரில் திரு.பார்த்தசாரதி அவர்களால் துவங்கப்பட்டு இயங்கி வரும் "இறையன்பு நூலகம் மற்றும் ஆராய்ச்சியகம்" நூலகத்துக்கு ஒய்வு பெற்ற மதுரை செந்தமிழ்க் கல்லூரி பேராசிரியை முனைவர் நிர்மலா மோகன் அவர்களும், உதவி சுற்றுலா அலுவலர் கவிஞர் இரா.இரவி அவர்களும், கவிஞர் அ. அழகையா அவர்களும் நூல்கள் வழங்கும் விழாவும், சிறந்த வாசர்களுக்கு புத்தகங்கள் பரிசளிப்பு விழாவும்  (21.2.2021 - உலக தாய்மொழி நாள்) இனிதே நடைபெற்றது. தொல்காப்பியர் மன்ற ஒருங்கிணைப்பாளர், திரு.இருளப்பன் அவர்கள் தலைமை தாங்க, தமிழ்சுடர் குரு.ஜெயச்சந்திரன் அவர்கள் முன்னிலை வகிக்க, இறையன்பு நூலக ஒருங்கிணைப்பாளர் திரு பார்த்தசாரதி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தி, தமிழ்சுடர் பேராசிரியை முனைவர் நிர்மலா மோகன், கவிஞர் அ. அழகையா, கவிஞர் இரா. இரவி குருசாமி ஞானவள்ளி அறக்கட்டளை  திரு.குருசாமி, இலக்கிய பேரவை தலைவர் திரு. சு. சங்கரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க, சிறந்த வாசகர்களுக்கு பரிசுகளும், கருத்துரையும் கோவை பாரதியார் பல்கலை கழகம் திருமதி மகேஸ்வரி வழங்க, திருமங்கலம் மக்கள் நல சங்கம் தலைவர் திரு. இரா. சக்கையா நன்றியுரை நல்க, "இறையன்பு நூலக விழா" சிறப்படைந்தது.
--

கருத்துகள்