-முனைவர்.இறையன்பு அவர்கள், ---7-2-21 தேதியிட்ட ராணி குடும்பப் பத்திரிகையில்,'மனத்தில் தோன்றிய வினாக்கள்!'எனும் தலைப்பில்.

முதுமுனைவர்.இறையன்பு அவர்கள், 7-2-21 தேதியிட்ட ராணி குடும்பப் பத்திரிகையில்,'மனத்தில் தோன்றிய வினாக்கள்!'எனும் தலைப்பில். ***************************************** * 'அகர முதல எழுத்தெல்லாம்...' என்ன பொருள்? உலகு மட்டுமல்ல, எழுத்துகளும் இறைமையிடமிருந்தே தொடங்குகின்றன என்று பொருள்.உலகம் இல்லாவிட்டால் எழுத்துகளுக்கு என்ன வேலை! ** யாரைப் பார்த்துப் பொறாமைப்படலாம்? யாரைப் பார்த்தும் பொறாமைப்படாதவர்களைப் பார்த்துப் பொறாமைப்படலாம். *** எழுத்து உன்னதமானதா?கழிவறையைச் சுத்தம் செய்வதும், களைகளை நீக்கம் செய்வதும், காகிதத்தை உற்பத்தி செய்வதும்கூட உன்னதமானவைதாம். செய்கிற தொழிலால் அல்ல; செய்கிற மனத்தால் செய்பவை உன்னதமாகின்றன. அதுவே 'செய்தொழில் வேற்றுமை'. **** கவலையில்லாத மனிதர்களை எங்கே காணலாம்? கல்லறைகளில். ***** உலகம் அழியப் போகிறதா? இனிமேல் அழிவதற்கு என்ன விட்டு வைத்திருக்கிறோம்!

கருத்துகள்